நீரிழிவு நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா?
உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துகளைக் கொண்டிருக்கும் பாதாமை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? என்பதை தெரிந்து கொள்வோம்.
டிரை ப்ரூட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம், உடலுக்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதுவரை நீங்கள் அன்றாடம் சாப்பிடவில்லை என்றால், இனி வரும் காலங்களில் தினமும் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிதில் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
கால்சியம் கிடைக்கும்
உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், உங்கள் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல அளவு ஊட்டச்சத்து கூறுகள் நிறைத்திருக்கும் பாதாம் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம். கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும் நீங்கும்.
மேலும் படிக்க | Boost Brain Function: இதை சாப்பிட்டா மூளை ஒழுங்கா வேலை செய்யும்
உடல் எடை குறையும்
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, பாதாம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லுங்கள். இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் எடை படிப்படியாக குறையும். முடிந்தால் ஊறவைத்து உட்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் பலன் பெறுவீர்கள்.
புற்றுநோயைத் தடுக்கும்
சிலர் புற்றுநோயைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பாதாம் போன்ற உலர்ந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை புற்றுநோயிலிருந்து விலக்கி வைக்கும்.
சர்க்கரை கட்டுபாடு
சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இதுவரை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடாமல் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் இதை உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | Marburg virus: மார்பர்க் வைரஸ் கொரோனா விட கொடியதா.. பீதியை கிளப்பும் WHO
(பின்குறிப்பு; இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR