Marburg Virus Alert: கொரோனா விட கொடிய வைரஸ்.. பீதியை கிளப்பும் WHO

Marburg Virus Treatment: கொரோனா வைரஸை விட மற்றொரு ஆபத்தான வைரஸ் நுழைந்துள்ளது. இந்த வைரஸின் பிடியில் யார் சிக்கினால் மரணம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 05:09 PM IST
  • மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு மார்பர்க் வைரஸ் பாதிப்பு.
  • கொரோனா வைரஸைப் போலவே, மார்பர்க் வௌவால்கள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது.
  • மார்பர்க் வைரஸை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Marburg Virus Alert: கொரோனா விட கொடிய வைரஸ்.. பீதியை கிளப்பும் WHO title=

Marburg Virus Symptoms: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து உலகம்  இன்னும் முழுமையாக  மீளவில்லை. முன்னபி போது லட்சக்கணக்கில் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தினசரி பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் பதிவாகின்றன. இந்நிலையில், மற்றொரு ஆபத்தான வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த கொடிய வைரஸின் பெயர் மார்பர்க். இந்த வைரஸை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 1967 ஆம் ஆண்டில் இந்த வைரஸால் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு மார்பர்க் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதை அடுத்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸின் தாக்குதல் ஏற்பட்டால்,  மரணம் ஏற்படும் சாத்தியக்கூறு மிக அதிகம் என்று நம்பப்படுகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே அழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Marburg virus: மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரவக்கூடிய எபோலா மற்றும் கொரோனா வைரஸைப் போலவே மார்பர்க் வைரஸ் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸைப் போலவே, மார்பர்க் வௌவால்கள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கொடிய வைரஸால் இறப்பு ஆபத்து 24 முதல் 88 சதவீதம் வரை இருக்கும். இந்த ஆபத்தான வைரஸ் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் குறித்த விவரித்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் இயக்குநர் ஜெனரல் என்.கே. கங்குலி, மார்பர்க் அறிகுறிகள் நபருக்கு நபர் சிறிது வேறுபடக்கூடும் என்று கூறினார். அதன் அறிகுறிகள் காய்ச்சலைப் போலவே இருக்கும். இதனை கண்டறிய, மாதிரிகள் எடுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு, திசு வளர்ப்பு மூலம் வைரஸ் கண்டறியப்படுகிறது. மார்பர்க் வைரஸ் தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், மார்பர்க் தொற்று பாதிப்புகள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு இது வரை பரவவில்லை என்பது நிம்மதி அளிக்கும் விஷயம்.

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News