தினமும் செக்ஸ் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்... இதோ!
Health Benefits Of Daily Sex: தினமும் உடலுறவு வைத்துக்கொள்வது தவறு என்ற கருத்துகள் கூறப்பட்டாலும், தினமும் ஆரோக்கியமான முறையில் உடலுறவு மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
உடலுறவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தினமும் உடலுறவு மேற்கொள்வதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக மேம்படும்.
தினமும் உடலுறவு மேற்கொண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்; கலோரிகள் குறையும்; இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களையும் குறைக்கிறது. மேலும், தினமும் உடலுறவு மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
1. நல்ல தூக்கம்
தீவிரமான உடலுறவு உங்கள் உடலின் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது நெருக்கத்தையும், உடலுறவை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்கள் சிறந்த தூக்கத்திற்கு உதவுகின்றன.
இதன்மூலம், நீண்ட ஆயுள், வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு, திருப்தியான தூக்கம், நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவும். குறிப்பாக, உச்சிம் அடைவது அல்லது சுயஇன்பம் மேற்கொள்வதும் மேலே குறிப்பிட்ட நன்மைகளுக்கு உதவும். உடலுறவின் மூலம் உச்சம் அடைவது, மற்றதை விட சற்று வேகமான பலன்களை தரும்.
2. இளமையாக வைத்திருக்கும்
காலையில் பொலிவு எழுந்திருப்பது இனி ஒருபோதும் கற்பனை அல்ல. முகப்பரு அல்லது வறண்ட சருமத்தால் அவதிப்படுகிறீர்களா?. ஒவ்வொரு நாளும் உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதைக் கருத்தில் கொள்ளுங்கள், உங்கள் சருமம் துடிப்பான அமைப்பைப் பெறுவதைக் காணலாம். இந்த இயற்கையான பளபளப்புக்கு மன அழுத்தம் மற்றும் நேர்மறை சிந்தனை காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா? ஆரோக்கிய நன்மைகள் இருக்கு
3. புற்றுநோயின் அபாயங்களைக் குறைக்கிறது
ஆம், தினசரி உடலுறவு வழக்கமான விந்து வெளியேறுவதால் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் என்பது விந்தணுக்களை நீண்ட நேரம் வெளியிடுமால் இருப்பதால் ஏற்படும் அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. சுயஇன்பம் மற்றும் சீரான உடலுறவு ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயங்களைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
4. மாதவிடாய் வலியை போக்கும்
மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது உண்மையில் அதை எளிதாக்கும். அவ்வாறு செய்வது ஒரு சங்கடமான உணர்வாக இருக்கலாம், ஆனால் அது வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. அந்த நேரத்தில் உடலுறவு கொள்வதால், கர்ப்பம் தரிப்பதில் குறைவான ஆபத்துகள் உள்ளன.
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதில் உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், உங்கள் அன்புக்குரியவரின் புகைப்படத்தைப் பார்த்தாலே, மாதவிடாய் வலி குறைவதை நீங்கள் காண்பீர்கள். இது கடுமையான மாதவிடாய் வலியில் இருந்து உங்களை விடுவிக்கும் ஒரு உளவியல் முறை. மேலும், மாதவிடாய் வலியில் இருந்து விடுபட நீங்கள் பாலியல் ரீதியாக உச்சமடைவதும் பலனளிக்கும்.
இவை மட்டுமின்றி, நீங்கள் தினமும் உடலுறவு மேற்கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறையும், ஹார்மோன்கள் சீராகும், ஆயுள் நீளும், பாலியல் வேட்கையை அதிகரிக்கச் செய்யும், ரத்த அழுத்ததையும் சீராக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் இதை உங்களிடம் துணையிடம் காட்டி ஒப்புதலையும் பெற்றுவிடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவை ஓட விரட்டும் ‘கேழ்வரகின்’ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ