யூரிக் அமிலத்தை குறைக்கும் சுலப வழி! மூட்டுவலியை விலக்க ஓமம்
Uric Acid Remedy With Ajwain: யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட பல்வேறு வழிகள் இருந்தாலும், அவை அனைத்திலும் சிறந்தது இது...
யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அதற்கு அருமையான தேர்வு ஓமம். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். யூரிக் அமிலம் அதுபோன்ர நோய்களில் ஒன்றாகும். யூரிக் அமிலம் என்பது உங்கள் உடலின் இயற்கையான கழிவுப் பொருளாகும், இது பியூரின்கள் எனப்படும் இரசாயனங்கள் உடைபடும்போது உருவாகிறது. நமது உடல் சிறுநீர் மற்றும் குடல் இயக்கம் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது.
ஆனால், உடல் அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கும் போது, அது இரத்தம் மற்றும் மூட்டுகளில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, யூரிக் அமிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுபப்டுத்த ஓமம் செயல்படுகிறது மற்றும் அதை உணவில் எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்
யூரிக் அமிலமும் ஓமமும்
உணவுகளுக்கு கசப்பான மற்றும் வித்தியாசமான சுவையை வழங்கும் ஓமம், செரிமானப் பிரச்சனைகளை சீர் செய்யும். சுவையை அதிகரிக்க இது பல உணவுகளில் சேர்க்கப்படும் ஓமம், சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அஜ்வைனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உயர்ந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
யூரிக் அமில வீட்டு வைத்தியம்
மூட்டுகளை யூரிம் அமிலம் பாதிக்காமல் இருக்க ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? தெரிந்துக் கொள்வோம்...
யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட காலையில் வெறும் வயிற்றில் ஓம தண்ணீர் அல்லது ஓமத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தலாம்.
மேலும் படிக்க | இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!
ஓமத் தண்ணீர் செய்வது எப்படி?
ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு ஓமத்தை தண்ணீரில் ஊறவைதக்கவும். கூடுதல் நன்மைகளுக்காக நீங்கள் தண்ணீரில் சிறிது இஞ்சி அல்லது கருப்பு உப்பு சேர்க்கலாம். காலையில், இந்த ஓமத் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
ஓமத்தில் இருந்து தேநீர் செய்வது எப்படி?
1. ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
2. இஞ்சியுடன் சிறிது ஓமம் சேர்க்கவும்.
3. அடுப்பை சிம்மில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அத்துடன் கருப்பட்டி, தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
யூரிக் ஆசிட் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலில், சீஸ், முட்டை, மீன், சிவப்பு இறைச்சி அல்லது வெள்ளை இறைச்சி ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இவற்றைத் தவிர, கீரை, பட்டாணி, ப்ரோக்கோலி, காளான்கள் போன்ற சைவ உணவுகளிலும் ப்யூரின் அதிக அளவில் உள்ளது. யூரிக் அமில பிரச்சனைக்கு மட்டுமல்ல, எந்தவித உடல் நலப் பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்க்க வல்லது ஓமம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ