பார்லியில் உள்ளன எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்: முழு விவரம் இதோ
Amazing Benefits of Barley : பார்லியில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், தாமிரம், புரதம், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்துக்கள் மற்றும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இன்றைய அவசர உலகில், உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவை பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. நீங்களும் இந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் பார்லியை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
பார்லியில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், தாமிரம், புரதம், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்துக்கள் மற்றும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பார்லியை உட்கொள்வது சிறந்த செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. உணவில் பார்லியை சேர்ப்பதனால் கிடைக்கக்கூடிய அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உடல் பருமனை கட்டுப்படுத்தும்
அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பார்லியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பார்லியில் பீட்டா-குளுக்கன்ஸ், ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச், டோகால்ஸ், டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள், பாலிசாக்கரைடுகள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இந்த அனைத்து கூறுகளும் இருப்பதால், பார்லியின் பண்புகளில் ஆன்டி-பெசிட்டி விளைவு காணப்படுகிறது.
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள்
உங்களுக்கு சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் பார்லி தண்ணீர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, சிறுநீரகம் தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளில் பார்லி நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் படிக்க | Health Alert: அதிகப்படியான டீ ரத்த சோகையை ஏற்படுத்தும்; எச்சரிக்கும் நிபுணர்கள்
குறைந்த கொலஸ்ட்ரால் அளவு
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு
சர்க்கரை நோயாளிகளுக்கு பார்லி தண்ணீர் மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க மிகவும் உதவுகிறது.
முகப் பொலிவு
பார்லி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, முகமும் பொலிவு பெறும்.
மலச்சிக்கல் நிவாரணம்
ஆராய்ச்சியில், புளித்த பார்லி சாறு மலமிளக்கி (மலச்சிக்கலை நீக்குகிறது) விளைவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பார்லியில் உள்ள பீட்டா-குளுக்கன் மற்றும் பியூட்ரிக் அமிலம் இந்த பார்லியின் பண்புகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
பார்லி உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
- பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை இது கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- இது சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
- பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது.
- அதோடு இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது.
- இதனால் இரத்த சோகை, மயக்கம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR