உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி

Kidney Flushing: சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 6, 2022, 11:46 AM IST
  • நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் பல முக்கிய பணிகளை செய்கின்றன.
  • பல வழிகளில் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியும்.
  • சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி title=

நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களின் முக்கிய செயல்பாடு, இரத்தத்தை வடிகட்டுவதும், அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதும், நச்சுகள் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றுவதும் ஆகும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதிலும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் சேதமடைந்தால், நமது உடலால் ​​​​இந்த செயல்பாடுகளை திறமையுடன் செய்ய முடியாது. இந்த நிலையில் நமது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீங்கள் ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், ​​போதுமான திரவங்களை உட்கொள்ளாமல், நச்சுத்தன்மையுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டாலும், உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

நாம் உட்கொள்ளும் உணவில் பலவித தேவையற்ற பொருட்களும் கலந்திருப்பதால், சிறுநீரகங்களை அவ்வப்போது சுத்தப்படுத்தி புத்துயிர் பெறுவது முக்கியமாகும்.

கிட்னி ஃப்ளஷிங்

சிறுநீரக ஃப்ளஷிங் என்பது சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாகும். இது ஒரு வகை டிடாக்ஸ் டயட் ஆகும். இது சிறுநீரகங்கள் சரியாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதிக தண்ணீர் குடிப்பது, பெர்ரி சாப்பிடுவது, சிவப்பு திராட்சை சாப்பிடுவது போன்ற பல வழிகளில் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியும். இந்த உணவுகள் சிறுநீரகத்தில் சேரும் நச்சுகள் மற்றும் பிற கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கும்.

இருப்பினும், சிறுநீரகத்தை சுத்தப்படுத்த எந்த குறிப்பிட்ட முறைகள் அல்லது உணவுகள் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு தற்போது எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், அதிக அளவில் திரவங்களை உட்கொள்வதும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நிச்சயம் உதவும்.

மேலும் படிக்க | நோய்களின் அபாயத்தைத் தணிக்கும் சூப்பர் ஜூஸ்கள்: தினசரி குடித்தால் 100 ஆயுசு

சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகள்

- களைப்பாக உணர்வது

- குமட்டல்

- அரிப்பு மற்றும் வறண்ட தோல்

- கணுக்கால் வீக்கம்

- பிரெயின் ஃபாக் 

- கால்களில் வலி

- அடிக்கடி சிறுநீரக கற்கள் பிரச்சனை வருவது

- சிறுநீர் பாதையில் தொற்று இருப்பது

- வாயில் மோசமான சுவை

- அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஊறவைத்த முந்திரியில் உள்ளன உடலுக்கான எக்கச்சக்க நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News