வேப்பிலையின் வேற லெவல் நன்மைகள்: தலை முதல் கால் வரை பயன் தரும்
Neem Benefits: சில மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல வகையான அபாயங்கள் குறைக்கப்படுகின்றன. வேப்ப இலைகளும் பல வித மருத்துவ குணங்கள் அடங்கிய இலைகளாகும்.
வேம்பின் நன்மைகள்: சில மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல வகையான அபாயங்கள் குறைக்கப்படுகின்றன. வேப்ப இலைகளும் பல வித மருத்துவ குணங்கள் அடங்கிய இலைகளாகும்.
வேப்பம்பூ பற்றியும் அவற்றின் முழுமையான ஆரோக்கிய பயன்கள் பற்றியும் அனைவருக்கும் பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த இலை பெரும்பாலும் கோடையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி பல வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது. இது தவிர, வேப்ப இலைகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல நன்மைகள் உள்ளன.
வேப்ப இலைகளின் பலன்கள்
- தொழுநோய் சிகிச்சையிலும் வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இதன் பயன்பாடு கண்பார்வையையும் கூர்மையாக்கும்.
- இது தவிர குடல் புழுக்கள், வயிற்றெரிச்சல், பசியின்மை, தோல் புண்கள் போன்ற நோய்களும் முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க | உடல் ஆரோக்கியமாக இருக்க மினரல் அவசியம், தெரிந்து கொள்ளுங்கள்
வேப்ப இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது
- வேப்ப இலைகளை வேகவைத்து அதன் நீரை உட்கொள்ளலாம்.
- இது தவிர வேப்ப இலையில் செய்யப்பட்ட தேநீரையும் அருந்தலாம்.
- இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
- இதை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அத்கரிக்கும்.
தோல் பிரச்சனைக்கு உதவும்
இது தவிர தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் வேப்ப இலையை பயன்படுத்தலாம். இதற்கு வேப்ப இலையை தண்ணீரில் போட்டு குளிக்கலாம். இதன் மூலம், சருமத்தில் உள்ள அனைத்து வித ஒவ்வாமையும் நீங்கிவிடும்.
வேப்ப மரப்பட்டை கஷாயத்தின் நன்மைகள்
- வேப்ப மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை குடித்து வந்தால், தோல் பிரச்சனைகள் நீங்கும்.
- வேப்பம்பூ கஷாயம் காய்ச்சலைக் குறைக்க உதவும்.
- உடல் பருமன் பிரச்சனையை போக்க வேம்பு கஷாயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
- தொண்டை பிரச்சனையை நீக்குவதற்கு வேப்பம்பூ கஷாயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக்க வேப்பம்பூ கஷாயம் உதவும்.
- வேப்ப மரப்பட்டையின் கஷாயம் பாக்டீரியா பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Betel Benefits: ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR