வேப்பிலையில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: இந்த வழியில் சாப்பிட்டு பாருங்க

Neem Leaf Benefits: நமக்கு தெரியாத பல மருத்துவ பயன்கள் வேப்பிலையில் உள்ளன. வேப்பிலை மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும் என்பது பலருக்கு தெரியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 12:35 PM IST
  • வேப்பிலையால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
  • வேப்பிலை மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகின்றது.
  • உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் இது பயன்படுத்தப்படுகின்றது.
வேப்பிலையில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: இந்த வழியில் சாப்பிட்டு பாருங்க  title=

வேப்பிலை நன்மைகள்: வேப்பிலையால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். வேப்பிலை மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகின்றது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் இது பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால், நமக்கு தெரியாத இன்னும் பல மருத்துவ பயன்கள் வேப்பிலையில் உள்ளன. வேப்பிலை மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும் என்பது பலருக்கு தெரியாது. அதாவது, இயற்கையான வழியில் மாரடைப்பு உபாதைகளை தவிர்க்க விரும்புபவர்கள் வேப்பிலையை பயன்படுத்தலாம். 

வேப்பிலை உட்கொள்ளும் விதம் பற்றி பலருக்கு பல குழப்பங்கள் இருக்கலாம். வேப்பிலையை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதை நேரடியாக, அதாவது பச்சையாக அப்படியே சாப்பிடலாம். அல்லது அதன் நீரை உட்கொள்ளலாம். இந்த இரண்டு வழிகளிலும் அதிக பலன்கள் உள்ளன. வேப்பிலையின் பிற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | Sperm Count: ஆண்களுக்கான எச்சரிக்கை... விந்தணுவை குறைக்கும் இந்த உணவுகள் வேண்டாமே... 

வேப்பிலையில் இந்த நன்மைகள் புதைந்துள்ளன

- தொழுநோய் சிகிச்சையில் வேப்பிலை பயன்படுத்தப்படுகின்றது. 

- இதன் பயன்பாடு கண்பார்வையையும் கூர்மையாக்கும். 

- இது தவிர குடல் புழுக்கள், வயிற்றெரிச்சல், பசியின்மை, தோல் புண்கள் போன்ற நோய்களும் முடிவுக்கு வரும்.

வேப்பிலையை எவ்வாறு பயன்படுத்துவது

- வேப்ப இலைகளை வேகவைத்து அதன் நீரை உட்கொள்ளலாம். 

- இது தவிர வேப்ப இலையில் செய்யப்பட்ட தேநீரையும் அருந்தலாம். 

- இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதன் பலன்கள் மிக அதிகமாகும்.

- இதன் பலன்களின் காரணமாக, நீங்களே இதை அடிக்கடி உணவில் சேர்க்கத் தொடங்குவீர்கள். 

தோலுக்கு பயன் தரும்:

தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் வேப்ப இலையை பயன்படுத்தலாம். சருமத்தில் பளபளப்பைக் கொண்டுவர, கண்டிப்பாக வேப்பம் சாறு குடிக்க வேண்டும். வேப்பம்பூ சாறு இயற்கையாகவே நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தினால், உங்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும். வேப்பஞ்சாறு உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பளபளப்பாக மாற்றும். இதற்கு வேப்ப இலையை தண்ணீரில் போட்டு குளிக்கலாம். இதன் மூலம், சருமத்தில் உள்ள அனைத்து வித ஒவ்வாமைகளும் நீக்கப்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் தக்காளி ஜூஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News