உடல் ஆரோக்கியத்துக்கு வேம்பின் பலன்கள்: வேம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பண்புகள் வேம்பில் காணப்படுகின்றன. இதனால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
வேம்பின் பயன்பாட்டின் மூலம் ஆரோக்கியம் தொடர்பான பல சிக்கல்களையும் சமாளிக்க முடியும். வேப்பிலையை பச்சையாக அப்படியே சப்பிடலாம். அதனை தண்ணீரில் போட்டு குளித்தால், அது சருமத்துக்கும் நல்லது.
வேம்பு கஷாயமும் உடலுக்கு மிகவும் நல்லது. வேப்பம்பூவின் கஷாயம் சுவையில் கசப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பண்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலேயே மிக எளிதாக வேப்பங்கஷாயத்தை தயார் செய்யலாம்.
வேப்பங்கஷாயத்தை வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
வேம்பு கஷாயம் செய்வது எப்படி
- வேப்ப மரப்பட்டையின் கஷாயத்தை தயாரிக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்.
- இப்போது அதில் சுமார் 10 கிராம் வேப்ப மரப்பட்டை சேர்க்கவும்.
- இப்போது தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக இருக்கும் போது, ஒரு கிளாஸில் வடிகட்டவும்.
- இப்போது தேநீர் போல குடிக்கவும்.
மேலும் படிக்க | Health Tips: சாப்பிட்ட உடனே இந்த பயிற்சிகளை செய்தால் செரிமானத் தொல்லை இருக்காது
வேப்ப மரப்பட்டை கஷாயத்தின் நன்மைகள்
- வேப்ப மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை குடித்து வந்தால், தோல் பிரச்சனைகள் நீங்கும்.
- வேப்பம்பூ கஷாயம் காய்ச்சலைக் குறைக்க உதவும்.
- உடல் பருமன் பிரச்சனையை போக்க வேம்பு கஷாயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
- தொண்டை பிரச்சனையை நீக்குவதற்கு வேப்பம்பூ கஷாயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக்க வேப்பம்பூ கஷாயம் உதவும்.
- வேப்ப மரப்பட்டையின் கஷாயம் பாக்டீரியா பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இரவு நேர உணவே ஒருவரின் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR