எள்ளு அல்லது எள் விதைகளை எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையை அள்ளித் தரும். எள்ளில் புரதம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ஜீங்க், புரதச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் பி1, வைட்டமின் பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்முடைய உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்து அளவில் 25 சதவீத தேவையை எள் விதைகளே பூர்த்தி செய்துவிடும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் எள்ளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். எள்ளை தொடர்ந்த டயட்டில் சேர்ப்பதால், இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம்  வரை எண்ணற்ற நன்மைகளை (Health Tips) பெறலாம். 


எலும்பு ஆரோக்கியம்


உடலின் சீரிய செயல்பாடுகளுக்கு எலும்புகள் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். உடலுக்கு வடிவத்தைக் கொடுத்து, நமது உருவத்தை கட்டமைக்கும் எலும்புகள் பலவீனமடைந்தால் முதுகுவலி, நடப்பதில் சிரமம், மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு,பற்கள் மற்றும் ஈறுகள் பலவீனமடைவது என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எள்ளில் கால்சியம் அதிகமாக உள்ளது.  இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உங்கள் இடுப்பு மற்றும் மூட்டுகளில் வலி தொடர்ந்து இருந்தால், எள் சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு, எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயும் எண்ணற்ற நன்மைகளை கொண்டது.


இதய ஆரோக்கியம்


எள் விதைகள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
எள்ளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது கொல்ஸ்ட்ராலை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே எள்ளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Fox Nuts: மூட்டு வலி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் மக்கானா தாமரை விதை


மன ஆரோக்கியம் மற்றும் முதுமை எதிர்ப்பு பண்புகள்


மனத்தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவும் எள்ளு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மைப்படுத்துகிறது. எனவே, உடலில் இரத்த ஈட்டத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம் கொலாஜன் உருவாவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், இது சிறந்த முதுமை எதிர்ப்பு உணவாக, நாம் நீண்ட காலம் இளமையாக இருக்க உதவுகிறது. இதனால், சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி இரண்டும் சிறப்பாக இருக்கும்.  


நோய் எதிர்ப்பு சக்தி


பருவகால நோய்களைத் தவிர்க்க, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பது மிகவும் முக்கியம். எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள, துத்தநாகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


உடல் பருமன்


உங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால்,  அடிக்கடி எள்ளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். புரதம் மற்றும் நார்சத்து நிறைந்த, எள்ளை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதினால், அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்பு குறையும். 


சரும ஆரோக்கியம்


எள்ளை தினமும் உட்கொள்வது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் இளமையான தோற்றத்தை நீண்ட கால பராமரித்து முதுமை ஏற்படுவதை தடுக்கலாம். எள்ளை எள் உருண்டை, எள்ளுப் பொடி, எள்ளு சாதம் என எள்ளை பலவிதங்களிலும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ