உலர் பழங்களில் ஒன்றான தாமரை விதை என்னும் மக்கானா எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இதயம், எலும்பு ஆரோக்கியம் என உடலை பிட்டாக வைத்துக் கொள்ள பல வகைகளில் உதவுகிறது. முதுமை வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மக்கானாவின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இதனை எந்த பருவத்திலும் இதை உட்கொள்ளலாம்.
தாமரை விதை சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தை (Heart Health) நல்ல முறையில் பராமரிக்க உதவும். ஏனெனில், அதில் சோடியம் மற்றும் கொழுப்பின் அளவு மிகக் குறைவு. கால்ஷியம் நிறைந்த மக்கானா எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் உதவும். தசை விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் தீர்வை அளிக்கும். எனவே, மக்கானா உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் மக்கானா உதவும்
பல நோய்களுக்கு மருந்தாகும் மக்கானா என்னும் தாமரை விதை
மக்கானா பல நோய்களைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீரிழிவு போன்ற பல தீவிர நோய்களில் இருந்து விடுபட மக்கானா நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதை தினசரி உட்கொள்வதால், மூட்டுவலி, உடல் பலவீனம், உடல் எரிச்சல், இதய நோய்கள், காது வலி, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் வலி, இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, தூக்கமின்மை, சிறுநீரக நோய்கள், உடல் சூடு ஆகியவற்றில் விடுபட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மக்கானாவை தொடந்து சாப்பிட பலன் கிடைக்கும், ஆண்மைக்குறைவைத் தவிர்க்க, உடலில் உள்ள சுருக்கங்களைப் போக்கவும தாமரை விதை உதவும்.
உடல் பருமனை குறைக்க உதவும் மக்கானா
மக்கானாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. அதோடு, கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. எனவே எடை இழப்புக்கான சிறந்த டயட் ஆக இருக்கும். உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் வயிறு நிறைவாக உணரவும் உதவும் சிறந்த சுற்றுண்டியாக மக்கானா இருக்கும்.
தாமரை விதை சாப்பிட சரியான நேரம்
நோய்களில் இருந்து விடுபட, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 முதல் 5 தாமரை விதைகளை சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. சில நாட்கள் தொடர்ந்து அவற்றை உட்கொள்வதன் மூலம் மேலும் பல நன்மைகள் கிடைக்கும். இரவில் தூங்கும் முன் ஏழு முதல் எட்டு மக்கானாவை சுடு பாலுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ