ஆண்மை பிரச்சனை முதல் உடல் பருமன் வரை... மாயங்கள் செய்யும் ABC ஜூஸ்
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தம், வேலைப்பளு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவை, ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்துள்ளன . குறிப்பாக ஆண்கள் மத்தியில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பிரச்சனையும் இருப்பதால், இந்தப் பிரச்சனை பன்மடங்கு அதிகரிக்கிறது. அதோடு தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் விந்தணு எண்ணிக்கை பிரச்சனை, விறைப்புத்தன்மை பிரச்சனை ஆகியவற்றை தீர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக, விந்தணுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டர் விந்துக்கு 15 மில்லியனுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால், அது குறைந்த விந்தணு எண்ணிக்கையாக கருதப்படுகிறது. உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது, பாலியல் உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது ஆகியவை, விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைந்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
ஆண்கள் பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் விந்தணு குறைப்பாடு , ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ( Apple, Beetroot and Carrot - ABC Juice) கலந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த ஏபிசி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு (Health Tips) மிகவும் நன்மை பயக்கும். அதன் மகத்தான ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
விந்தணுக்களை அதிகரிக்க உதவும் ஏபிசி ஜூஸ்
ஏபிசி ஜூஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க எளிதான வழியாகும். இந்த சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் லைகோபீன் ஆகியவை அதிகம் உள்ளன. இவை பாலியல் பிரச்சனைகளை தீர்க்க தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஆற்றலை அள்ளித் தரும் ஏபிசி ஜூஸ்
ஏபிசி ஜூஸில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. சோர்வு மற்றும் பலவீனத்தை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வின்றி நீண்ட நேரம் உற்சாகமாக வேலை செய்யலாம்.
மேலும் படிக்க | நோய்கள் எதுவும் உங்க பக்கம் வரவே வராது.. உத்திரவாதம் கொடுக்கும் சில மூலிகை டீ வகைகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஏபிசி ஜூஸ் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
உடல் பருமனை கட்டுப்படுத்தும் ஏபிசி ஜூஸ்
ஏபிசி ஜூஸில் குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால், அதிகப்படியான உணவு உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுவது அல்லது அதிகரிக்கும் ஆபத்து குறைகிறது.
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ்
ஏபிசி ஜூஸில் உள்ள சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரித்து, சுருக்கங்களை போக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், முடியை வலுவாக்குவதுடன், முடி உதிர்வதையும் தடுக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ