`இதய ஆரோக்கியம்` முதல் `எடை இழப்பு` வரை மாயங்கள் செய்யும் கொத்தவரங்காய்!
கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸ் சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது.
நம்மில் பலருக்கு கொத்தவரங்காயின் குண நலன்கள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம். கிளஸ்டர் பீன்ஸ், அதாவது கொத்தரவங்காய் வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன.அதன் அறிவியல் பெயர் 'சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்'. ஆங்கிலத்தில் இது கிளஸ்டர் பீன் என்று அழைக்கப்படுகிறது. பல மருத்துவ குணங்கள் இதில் காணப்படுகின்றன, இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை கொத்தவரங்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இன்று அறிந்து கொள்ளலாம். கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸ் சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது. கொத்தரவரங்காயில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம், என்பதோடு இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும். பலர் இதை சாலட் போல் பச்சை காய்கறியாக சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.
1. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி கொத்தரவரங்காய் பற்றி குறிப்பிடுகையில், இதில் நார் சத்து அதிகம் காணப்படுகிறது என்கிறார். அதனால், இது கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொத்தரவரங்காய் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.
2. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
நீரிழிவு நோயாளிகள் தவறாமல் கொத்தரவரங்காயை உட்கொள்ள வேண்டும். கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
3. எலும்புகளை வலிமையாக்கும்
கொத்தவரங்காய கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றன. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். எனவே, கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.
4. மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து நிவாரணம்
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி இது பற்றிகூறுகையில், நீங்கள் மலச்சிக்கல் பிரச்சினையுடன் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கொத்தரவங்காயை கட்டாயம் சேர்க்கவும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ