நீரிழிவு நோயை ஓட விரட்டும் வெண்டைக்காய்... பயன்படுத்துவது எப்படி!

வெண்டைக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 03:28 PM IST
  • பச்சைக் காய்கறிகளில் வெண்டைக்காய் பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறி எனலாம்.
  • வெண்டைக்காய் கறி சுவையில் மட்டுமல்ல மருத்துவ குணங்களிலும் சிறந்தது.
நீரிழிவு நோயை ஓட விரட்டும் வெண்டைக்காய்... பயன்படுத்துவது எப்படி! title=

பச்சைக் காய்கறிகளில் வெண்டைக்காய் பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறி எனலாம். வெண்டைக்காய் கறி சுவையில் மட்டுமல்ல மருத்துவ குணங்களிலும் சிறந்தது. வெண்டைக்காயின் உள்ளே இருக்கும் பகுதி தும்மலை போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காய் மட்டுமல்ல, அதில் தயாரித்த நீரும் மிகவும் நன்மை பயக்கும். இதனை அருந்துவதால், உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆகியவை வெண்டைக்காயில் காணப்படுகின்றன. வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, துருக்கியில் , சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்க வறுத்த வெண்டைக்காய் விதைகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெண்டைக்காய் கிளைசெமிக் கட்டுப்பாட்டுடன் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. வெண்டைக்காய் நீரிழிவு நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இது நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

வெண்டைக்காய் உடல் எடையையும்  குறைக்கிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. இது தவிர, வெண்டைக்காய் கண்களுக்கு சிறந்தது, பார்வையை மேம்படுத்துகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது, கர்ப்ப காலத்தில் மிகவும் நன்மை பயக்கும், சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காய் சிறுநீரக நோயையும் தடுக்கிறது.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

வெண்டைகாய் நீரை தயாரிப்பது எப்படி

வெண்டைக்காயை துண்டு துண்டாக நறுக்கி, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை குடிக்கவும். இதேபோல், வெண்டைக்காய் விதைகளை பொடியாக வாங்கலாம் அல்லது விதைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளலாம். வெண்டைக்காயை  கறி, தயிர் பச்சடி ஆகிய வடிவிலும் உட்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News