கொழுப்பு டக்கென குறைய வேண்டுமா? வெறும் வயிற்றில் ‘இந்த’ தண்ணீரை குடிங்க..
Health Benefits Of Drinking Ginger Water In Empty Stomach : வெறும் வயிற்றில் சில ஆரோக்கிய பானங்களை உட்கொண்டால் கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறையுமாம், அவை என்னென்ன பானங்கள் தெரியுமா?
Health Benefits Of Drinking Ginger Water In Empty Stomach : கொழுப்பை குறைக்க வேண்டுமென்றால், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஜிம் வர்க்-அவுட்டைத்தாண்டி இன்னும் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என முழுமையான முயற்சியில் இறங்குபவர்கள், தங்களது உணவு முறைகளிலும் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் சில இயற்கை பானங்கள் உதவுகின்றன. இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அதிலிருந்து கிடைக்கும் பலன்களும் அதிகம். அப்படி, உடலுக்கு அளப்பரிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் ஒரு இயற்கை பானம் குறித்து இங்கு பார்க்கலாம்.
இனிமையான பலன்களை தரும் இஞ்சி தண்ணீர்:
இஞ்சி தண்ணீர், உடலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த பானமாக பார்க்கப்படுகிறது. இது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்க, இந்த நீரை தினமும் காலையில் அருந்தலாம். நம் வீட்டின் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் ஹெல்தி உணவு பொருட்களுள் ஒன்றாகவும் இருக்கிறது இஞ்சி. தலைவலி, சளி, குமட்டலை தவிர்க்கும் நற்குணங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது, இஞ்சி. இந்த இஞ்சி தண்ணீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நன்மை ஏற்படும்? இங்கு பார்ப்போம்.
வீட்டு வைத்தியம்..
இஞ்சி போன்ற இயற்கை மூலிகைகளில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் சத்துகள் இயல்பாகவே நிறைந்துள்ளன. இது, பருவகால காய்ச்சலை குணப்படுத்த உதவும். இரண்டு கிராம் இஞ்சியை தண்ணீரில் சேர்த்து குடித்தால் குமட்டல் அறிகுறிகள் சரியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமன்றி, புற்றுநாேயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளை சமாளிக்கவும் இஞ்சி உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும்:
இஞ்சியில் கொழுப்பை எரிக்கும் புரதம் அதிகளவில் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு இருதய நோய் பாதிப்புகள் எளிதில் தாக்கலாம். இதை எதிர்த்து சமாளிக்க, இஞ்சி தண்ணீர் உதவும். உடலில் இருக்கும் கொழுப்புகள் சட்டென கரைய, இஞ்சி தண்ணீரை அருந்தலாம்.
செரிமான கோளாறை சரி செய்ய உதவும்..
இஞ்சியின் வேரில் உள்ள இயற்கையான மூலப்பொருள், gingerol. இது, நாம் சாப்பிடும் உணவுகள் விரைவில் ஜீரணம் ஆவதற்கும், சீக்கிரமாக சாப்பிட்ட உணவின் ஆற்றல் உடலுக்கு கிடைக்கவும் உதவுகிறது. இஞ்சி நீரை குடிப்பதால் செரிமான கோளாறுகள் சரியாகி வயிற்றிலேயே வெகு நேரம் உணவு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
இஞ்சி, உடலில் இருக்கும் இன்சுலின் அளவை பாதுகாக்கிறது. இது குறித்து 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், டைப் 2 சர்க்கரை நோய் கொண்டுள்ளவர்கள், தினமும் இஞ்சி தண்ணீர் குடிப்பதாலும் தங்களது உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதாலும் இரத்த சர்க்கரை அளவு வெகு நாட்களாக கட்டுப்பாட்டில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடல் வீக்கத்தை குறைக்கிறது:
இஞ்சி, குடல் வீக்கத்தை குறைக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடன்ஸ் சத்துக்கள் வயிறு அழற்சியை தடுத்து ஒவ்வாமையை தவிர்க்கிறது. இதனால் குடல் வீக்கமும் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சர்க்கரை இல்லாம சாப்பிட்டா இவ்வளவு நல்லதா? இனிப்பை தவிர்த்தால் வாழ்க்கை இனிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ