ஜீரண சக்தி: நல்ல உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ, அந்த உணவு ஜீரணமாவதும் அவ்வளவு முக்கியமாகும். நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், உங்கள் செரிமானம் சரியாக இல்லாவிட்டால், உண்ணும் உணவின் முழு ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு கிடைக்காது.
இதனுடன், அஜீரணம், வாயுத்தொல்லை, புளிப்பு ஏப்பம், குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் தொடங்குகிறது. இந்த பதிவில் செரிமான சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மற்றும் வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பலவீனமான செரிமான சக்தியின் அறிகுறிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
- ஜீரண சக்தி பலவீனமாக இருக்கும்போது, உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.
- இதனால், இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, உணவு உட்கொண்டவுடன் சோர்வு அல்லது தூக்கம் வரத் தொடங்கும்.
- சாப்பிட்டவுடன் வயிறு உப்பசமாக இருக்கும்.
- அதிக வாயு உருவாகி வயிற்றில் கனம் உண்டாகும்.
மேலும் படிக்க | மாரடைப்பைத் தவிர்க்க வேண்டுமா; முருங்கை இலைகளை கட்டாயம் டயட்டில் சேர்க்கவும்
செரிமானத்திற்கான ஆயுர்வேத வைத்தியம்
- உணவுக்கு முன், எலுமிச்சை சாறுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து, அதில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு கலக்கவும். இந்த பேஸ்ட்டை சாப்பிடுங்கள்.
- பச்சை மற்றும் சமைத்த உணவை ஒன்றாக சாப்பிட வேண்டாம். அதாவது வெள்ளரிக்காய் சாலட் போன்ற சமைக்காத பண்டங்களை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்தே சாப்பிட வேண்டும்.
- இரவில் தயிரில் உப்பு கலந்து பச்சடி செய்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதைவிட, இந்த தயிரை சிலுப்பி மோராக்கி அப்படியே உட்கொள்ளலாம். இது ஆரோக்கியத்துக்கு நல்லது.
- தயிர் பச்சடி போன்ற தயிரால் செய்யப்படும் உணவு வகைகளை காலை வேளைகளில் சாப்பிடுவது நல்லது.
- சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் முழு கவனமும் உங்கள் உணவில் மட்டுமே இருக்க வேண்டும்.
- இப்படி செய்வதால், செரிமானத்திற்குத் தேவையான சாறுகளின் சமநிலை பராமரிக்கப்பட்டு, சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.
- உணவுடன் சீரகம்-பெருங்காயம் கலந்த மோரை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
- அதிக நார்ச்சத்து மிக்க காய்கறிகளை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மேம்படும்.
- உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.
- சரியான நேரத்தில் தூங்கி எழுவது வயிற்றை நன்றாக வைத்திருக்கும்.
- திரிபலா சூரணத்தை உட்கொள்வதன் மூலம், வயிறு சுத்தமாக இருக்கும், செரிமானமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR