Health News: இதயம், வயிறு, சுவாசம் என அனைத்தையும் பூப்போல் காக்கும் பூண்டு
கொரோனா காலத்தில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொற்றுநோயைத் தவிர்க்க, இஞ்சி சாறுடன் கலந்த பூண்டு மற்றும் தேனை சாப்பிடலாம். பூண்டு சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பல ஆபத்தான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
பூண்டின் நன்மைகள்: கொரோனா தொற்றுநோய் உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தொற்று பரவி இருக்கும் இந்த காலத்தில், நாம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொற்றுநோயைத் தவிர்க்க, இஞ்சி சாறுடன் கலந்த பூண்டு மற்றும் தேனை சாப்பிடலாம். பூண்டு சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பல ஆபத்தான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
பூண்டில் (Garlic) ஆன்டி-ஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு ஆகிய மருத்துவ அம்சங்கள் உள்ளன. பூண்டு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் உடல் பல வகையான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதை இது தடுக்கிறது.
பூண்டை உட்கொள்வதால் நாம் எந்தெந்த நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என இங்கே காணலாம்:
பூண்டு இந்த நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது
1- இதய நோய்: காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது கொழுப்பைக் (Fat) குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
2- சுவாச நோய்: சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பூண்டின் ஒரு பல்லை சூடாக்கி, ஒவ்வொரு நாளும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். பாலில் பூண்டின் மூன்று பல்லை வேகவைத்து சாப்பிடுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ALSO READ: ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்னா இதை சாப்பிடுங்க!
3- வயிற்று பிரச்சனைகள்: உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நீங்கள் பூண்டு, கல் உப்பு, நெய், பெருங்காயம் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
4- அமிலத்தன்மை மற்றும் வாயுத் தொல்லை: உங்களுக்கு வாயு மற்றும் அமிலத்தன்மை குறித்த பிரச்சனைகள் இருந்தால், சாப்பிடுவதற்கு முன், 1-2 பல் பூண்டு, கருப்பு மிளகு மற்றும் கல் உப்பு ஆகியவற்றை சிறிது நெய்யில் சேர்த்து உட்கொள்ளவும்.
5- பல்வலி: பல்வலி ஏற்படும்போது, பூண்டை நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவவும். இது வலியை குறைத்து நிம்மதி அளிக்கும்.
6- இரத்த சர்க்கரை அளவு: தினமும் பூண்டு சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு (Diabetes) நோயால் ஏற்படும் நோய்களும் குணமாகி, இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.
7- ஒவ்வாமையில் நிவாரணம்: பூண்டு ஒவ்வாமையை நீக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஒவ்வாமை குறிகள் மற்றும் தடிப்புகள் நீங்கும்.
8- நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்: பூண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் பூண்டு சாப்பிட வேண்டும்.
ALSO READ: அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களை காக்கும், பிற ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR