Health Benefits of Green Chili: புதுடெல்லி: பெரும்பாலான மக்கள் பச்சை மிளகாயை ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால், சிலர் பச்சை மிளகாயை சாப்பிட விரும்புகிறார்கள். பச்சை மிளகாயால் உணவின் சுவை அதிகரிக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல சமீபத்திய ஆராய்ச்சிகளில், பச்சை மிளகாய் சாப்பிடுவதன் மூலம் பல வகையான உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும் என கூறப்பட்டுள்ளன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பச்சை மிளகாயில் வைட்டமின் சி போதுமான அளவு உள்ளது. இது பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியத்தை அளிக்கின்றது. 


வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை பச்சை மிளகாயில் ஏராளமாக உள்ளன என்று உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் தெரிவித்துள்ளார். இதில் பீட்டா கரோட்டின், கிரிப்டாக்சாண்டின், லுடீன்-ஜீயாக்சாண்டின் போன்ற ஆரோக்கியமான பல விஷயங்கள் உள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


பச்சை மிளகாய் பல கடுமையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது


உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, உணவுக்கு சுவையைக் கூட்டும் பச்சை மிளகாய் சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. பச்சை மிளகாயை உட்கொள்வதன் மூலம், பல கடுமையான நோய்களையும் நாம் தவிர்க்கலாம். இது எடையைக் குறைப்பதோடு இரத்த ஓட்டத்தையும் விரைவுபடுத்துகிறது.


ALSO READ: Health News: கொண்டைக் கடலையின் அற்புதமான ஊட்டச்சத்துகள்


பச்சை மிளகாயின் நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது


டாக்டர் ரஞ்சனா சிங்கின் கூற்றுப்படி, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பலவீனமாக இருந்தால், பச்சை மிளகாய் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கொரோனா காலத்தில் பச்சை மிளகாய் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுதான். பச்சை மிளகாய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் பாக்டீரியா இல்லாமல் இருக்க உதவும்.


இரத்த ஓட்டம் துரிதப்படுத்துகிறது


பச்சை மிளகாயில் கேப்சைசின் எனப்படும் கலவை உள்ளது, இது மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமாக இருக்கிறது. மிளகாய் சாப்பிடுவது இரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டமும் வேகமாக இருக்கும். இதன் காரணமாக முகத்தில் உள்ள பருக்களின் பிரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும். 


பச்சை மிளகாய் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது


பச்சை மிளகாய் உங்கள் முகத்தை பிரகாசமாக்க உதவுகிறது. வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி இதில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக (Skin Care) வைத்திருக்க உதவும்.


கண்களுக்கும் நன்மை பயக்கும்


பச்சை மிளகாய் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களுக்கு ஆரோக்கியத்தை (Eye Care) சேர்க்கிறது.


ALSO READ: காலையில் தினமும் நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR