Menstrual Pain: மாதவிடாய் வலியால் அவதியா? சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ!!
சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல பெண்கள் வலி நிவாரணிகளை நாடுகின்றனர்.
Tips to get Rid of Periods Cramps: மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் இயற்கையான உடல்ரீதியான செயல்முறையாகும். சிலருக்கு இந்த சமயத்தில், அதிக இரத்தப்போக்கும், சிலருக்கு அதிக வலியும் இருப்பது வழக்கம்.
சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகளும் ஏற்பட்டு அவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல பெண்கள் வலி நிவாரணிகளை நாடுகின்றனர். ஆனால், வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
மாதவிடாய் வலியிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காணலாம். பக்க விளைவுகள் இல்லாத சில எளிய வழிகளைப் பற்றி காணலாம்:
1. வெதுவெதுப்பான நீரால் வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும்
மாதவிடாயின் (Menstruation) போது வயிற்றில் அதிக வலி இருந்தால், வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, பிழிந்து, அதை வைத்து வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம், ஹாட் வாட்டர் பேக் கொண்டும் இதை செய்யலாம். இதன் மூலம் கருப்பையின் தசைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. சூடான நீரில் குளிப்பதும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். இது உடல் வலிக்கும் நிவாரணம் அளிக்கும். மேலும், சூடான அல்லது வெதுவெதுப்பான பானங்களை குடிப்பதாலும், வயிற்று வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2. மூலிகை தேநீர் குடிக்கவும்
மூலிகை தேநீர் மாதவிடாயின் போது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் பெண்கள் கண்டிப்பாக இஞ்சி போட்ட தேநீரை குடிப்பது நல்லது என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். மூலிகை தேநீர் வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் இருந்து சோர்வை அகற்றவும் உதவுகிறது. இது தவிர, கிரீன் டீயை குடிப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
ALSO READ: Menstrual cycle: மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
3. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்
தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் லினோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. இந்த எண்ணெயைக் கொண்டு அடிவயிற்றை மசாஜ் செய்வதால் நல்ல நிவாரணம் ஏற்படும். இது உடல் மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, தசை பிடிப்பையும் குறைக்க உதவுகிறது.
4. லேசான உடற்பயிற்சி செய்யவும்
பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி (Exercise) செய்வதில்லை. மாதவிடாய் காலத்தில் லேசான உடற்பயிற்சி செய்வது வலியிலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கும் என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நீங்கள் விரும்பினால், லேசான நடைபயிற்சியையும் மேற்கொள்ளலாம். அதுவும் வலியிலிருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.
ALSO READ: ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR