தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய் ஓடும்…. !!!!

தேங்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பாலில் பல அரிய மருத்துவ பலன்கள் உள்ளன

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 9, 2020, 06:26 PM IST
தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய்  ஓடும்…. !!!!

இது கொரோனா(Corona) காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் (Cocunut) சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்டு. இதை அறிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படுவது உறுதி.

தினசரி ஒரு துண்டு தேங்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக அதிகரிக்கும்.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!

புதுடெல்லி (New Delhi): உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது.

அதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர்.  தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்தில், இதனை கைகளில் தடவிக் கொண்டு சென்றால், நோய் தொற்று ஏற்படாது.

தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், அதில். ஆன்டிவைரல் கூறுகள் உள்ளன. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும்.

ALso READ | உண்மையில் நமக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையா... வல்லுநர்களின் கருத்து என்ன...

தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும் அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

தேங்காய் எண்ணெய் நல்ல சன்ஸ்கிரீன். வெயிலில் வெளியே செல்வதற்கு முன் இதை தடவிக் கொண்டால் போதும். விலையுயர்ந்த சன்ஸ்கிரீன் எதுவும் தேவையில்லை.

கோடையில் சிலருக்கு மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படும். தேங்காய் அவர்களுக்கு ஒரு அருமருந்து போல வேலை செய்கிறது. சர்க்கரையுடன் இதனை சேர்த்து சாப்பிடுவதால் ரத்தக்கசிவு பிரச்சினை நீங்கும்.

தேங்காய் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை போக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன.