வயிற்று வலியா? மாத்திரை வேண்டம், பாட்டி சொன்ன வீட்டு வைத்தியங்கள் இதோ

நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான கோளாறுகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், நமது வயிற்றின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நமது உடல் ஆரோகியத்தில் நமது வயிற்றுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான கோளாறுகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், நமது வயிற்றின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
வயிற்றில் வாயு பிரச்சனை வருவது ஏன்?
பல சமயங்களில், அதிக காரம் நிறைந்த உணவை உண்பதாலோ, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை உட்கொள்வதாலோ, மைதாவால் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதாலோ, அதிகப்படியாக உணவை உட்கொள்வதாலோ, வயிற்றில் வாயுத் தொல்லையும் (Gastric Problem) வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய நாம் சில மாத்திரைகளை சாப்பிட்டு, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் பாதிக்கப்படுகிறோம். அதற்கு பதிலாக காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்துள்ள சில வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினால், நமது பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதோடு, நமக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில வீட்டு வைத்திய முறைகளை இங்கே காணலாம்:
1. அரை டீ ஸ்பூன் ஓமம், கால் டீ ஸ்பூன் கருப்பு உப்பு என இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக்கொண்டு வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்படி செய்தால், வயிற்று வலி, வயிற்றில் வாயு பிரச்சனை, வயிற்று உப்பசம் ஆகிய பிரச்சனைகள் உடனடியாகத் தீரும்.
2. வயிற்றில் வலியோ, வாயு பிரச்சனையோ ஏற்பட்டால், ஒரு சிறிய இஞ்சித் துண்டை (Ginger) வாயில் போட்டு மெல்லவும். அல்லது வெந்நீரில் இஞ்சியைப் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டிக் குடிக்கவும்.
ALSO READ: Brown Rice vs White Rice: உங்கள் உடல்நலனுக்கு எந்த அரிசி சிறந்தது? இங்கே காணலாம்
3. ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கருப்பு உப்பைப் போட்டு குடித்தால் வாயு பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.
4. அரை டீ ஸ்பூன் சுக்கு பொடியில், சிறிதளவு பெருங்காயமும், சிறிதளவு கல் உப்பும் சேர்த்து வெந்நீரோடு (Water) உட்கொள்ளவும். இதன் மூலமும் வயிற்று வலி மற்றும் வாயுப் பிரச்சனையிலிருந்து தீர்வு காணலாம்.
5. காலையும் மாலையும் உணவு உட்கொண்ட பிறகு, ஒரு லவங்கத் துண்டை வாயில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் புளித்த ஏப்பம் வராது, வாயுப் பிரச்சனையும் உங்களை வாட்டாது.
(குறிப்பு: எந்த வித தீர்வையும் முழுமையாகவோ, அல்லது நீண்ட நாட்களுக்கோ பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு எங்கள் இணையதளம் பொறுப்பேற்காது.)
ALSO READ: தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா? அதிர வைக்கும் health news!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR