Health News: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2021, 09:29 PM IST
  • தண்ணீர் என்பது நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.
  • சிறந்த செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு எப்போதும் வெதுவெதுப்பான நீரை உணவுடன் குடிக்கலாம்.
  • சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் பலவீனம் ஏற்படலாம்.
Health News: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது? title=

Health News: தண்ணீர் என்பது நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம்.

உணவு உண்ணும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தண்ணீர் குடிப்பதற்கும் செரிமானத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நல்ல ஆரோக்கியத்திற்கு நீர் அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீர் மற்றும் பிற திரவங்கள் உணவுப் பொருட்களை சிறு துகள்களாக உடைக்க உதவுகின்றன. இதன் காரணமாக நமது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்ள உதவி கிடைக்கிறது. நீர் மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் (Habits) உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் நமது பழக்க வழக்கங்களில் செய்யும் சிறிய மாற்றங்கள் சிறிது நேரம் கழித்து சுகாதார பிரச்சினைகளை சமாளிக்க பெரிய அளவில் உதவும். அத்தகைய ஒரு பழக்கம்தான் தண்ணீர் குடிப்பது. அதாவது, பகலில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள், குறிப்பாக சாப்பிடும் நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும்.

பெரும்பாலானோர், தங்கள் உணவை தண்ணீர் (Water) பருகி நிறைவு செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அப்படி செய்வது சரியானதா? இது தொடர்பாக, பலர் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். உணவை உட்கொள்ளும்போது தண்ணீரை குடிப்பது நமது செரிமானத்திற்கு மோசமானது என்று பலர் கூறுகின்றனர். இப்படி செய்வது நச்சுகளை ஓரிடத்தில் குவிக்கும் என்றும் இதனால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ALSO READ: Shocking: 15 நிமிடம் குறைவாக உறங்கினாலும், உடல் பருமன், sugar, BP எல்லாம் வரும்

உணவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் இத்தனை எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்த ஆச்சரியம் இயற்கையான ஒரு விஷயம்தான். இது யாரோ கிளப்பிவிட்ட கட்டுக்கதையா என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.

இன்ஸ்டாகிராமில், ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் தண்ணீர் குடிப்பதற்கான சரியான நேரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் கூற்றுப்படி, உணவை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் பலவீனம் ஏற்படலாம். அதே நேரத்தில் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடல் பருமனுக்கு (Obesity) வழிவகுக்கும்.

சிறந்த வழி எது?

சாப்பிடும்போது தண்ணீரை சிறிது சிறிதாகக் குடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.

இதனால் என்ன பயன்?

இது உணவை உடைக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு சிறந்தது என்று அவர் கூறிகிறார்.

எந்த வகையான தண்ணீரை குடிக்க வேண்டும்?

சிறந்த செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு எப்போதும் வெதுவெதுப்பான நீரை உணவுடன் குடிக்கலாம். சிறந்த செரிமானத்திற்கு, மூலிகைகளை தண்ணீரில் கலக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீரை சூடாக்கும் போது, ​​உலர்ந்த இஞ்சி தூள், பெருஞ்சீரகம் அல்லது அகாசியாவை அதனுடன் சேர்க்கலாம்.

ALSO READ: Health News: மன அழுத்தம், இறுக்கம் அகல எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News