Clove Benefits: உங்கள் சமையலறையில் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களான இலவங்கப்பட்டை, கடுகு, ஏலக்காய், சின்னி மற்றும் கிராம்பு போன்றவை உணவின் சுவை மற்றும் நறுமணத்தையும் மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கிராம்புகளை தவறாமல் சாப்பிடுவது உங்களை பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும். ஆயுர்வேதத்தில் கிராம்பு (Clove Benefits) பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.
கிராம்புகளின் மருத்துவ பண்புகள் (Medicinal Benefits of Cloves): கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே, ஃபைபர், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், கிராம்பு நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் கிராம்பு உடலின் பல நோய்களை அகற்ற உதவுகிறது.
ALSO READ | Health News: ஏராளமாய் நன்மைகளை அள்ளித் தரும் ஏலக்காயை பயன்படுத்தி பயன் பெறுவோம்
இரவில் கிராம்பு சாப்பிடுவதால் என்ன நன்மைகள் (What are the benefits of eating cloves at night): கிராம்பு சாப்பிட சரியான நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் கிராம்பைப் பயன்படுத்துவது நல்லது. இருப்பினும், இரவில் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 கிராம்பு கலந்த சூடான நீரை பருகிய பின்னர் 1 கிளாஸ் சூடான நீரைக் குடிக்கவும். இதன் மூலம் இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுப் பிடிப்புகள், முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- கிராம்பு சாப்பிடுவதும், இரவு படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் மலச்சிக்கல், வயிற்று வலி (Stomach Pain), இரைப்பை மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவும்.
- உங்களுக்கு பல் வலி அல்லது பல்லில் புழுக்கள் இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு 2 கிராம்புகளை மென்று சாப்பிட்டு, பின்னர் 1 கப் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.
ALSO READ | Health News: உடல்நலம் காக்க பல நன்மைகளை அள்ளித்தரும் கேழ்வரகு
- கிராம்பு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும், தலைவலியைப் போக்க உதவும். கிராம்பு சாப்பிடுவது உங்களுக்கு வாசனை பிரச்சனை இருந்தாலும் உங்களுக்கு நன்மை பயக்கும்.
- படுக்கைக்கு செல்வதற்கு முன் 2 கிராம்புகளை சாப்பிடுங்கள், உங்களுக்கு தொண்டையில் சிக்கல் இருந்தால் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்த பிறகு, தொண்டை பிரச்சினை, தொண்டை வலி போன்றவரை சரியாகும்.
கிராம்பு காபி தண்ணீர்: கிராம்பு சுவையாக இருப்பதால் மெல்லவோ சாப்பிடவோ கடினமாக இருந்தால், கிராம்பை நன்றாக வேகவைத்து 2-3 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டி கொதிக்க வைக்கவும். அதைக் குடித்தால் உடல்நலம் தொடர்பான பல நன்மைகளையும் நீங்கள் பெறலாம். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அல்லது சளி இருமல் இருந்தால், 1 கிராம்பு அரைத்து அதனை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR