நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவினியாகும் மாமர இலைகள்; பயன்படுத்தும் முறை இதோ!
இரத்ததில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிக அளவிலேயே இருந்தால், கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்க நேரிடலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது. சர்க்கரை நோய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய், உடலின் பிற உறுப்புக்களை மிகவும் பாதிக்கிறது. இரத்ததில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிக அளவிலேயே இருந்தால், கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்க நேரிடலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
இந்நிலையில் மா இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் மாமர இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம். இருப்பினும், தீவிர நோயாளிகள் அதை உட்கொள்வதற்கு முன்பு ஒருமுறை தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
மாமர இலைகளில் நிறைந்திருக்கும் சத்துக்கள்
மாம்பழ இலைகளில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதாவது அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இதை முயற்சி செய்யலாம். இதனால் உங்கள் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் மாமர இலைகளை சாப்பிடலாம். இதனை உட்கொள்வது கண்பார்வையை அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணை போல் கரைக்கும் '3' மேஜிக் பானங்கள்!
மா இலைகளை பயன்படுத்துவது எப்படி
முதலில் நோயாளிகள் 10-15 மா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு இரவு முழுவதும், அவற்றை இப்படியே விட்டு விடுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!
நீரிழிவு நோயில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சிக்கலை ஏற்படுத்தாத இயற்கை உணவு பொருட்களை உட்கொள்வதால், பக்க விளைவுகளை தடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. அதோடு கூடவே சிறந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களை நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் Vitamin B12 குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ