கொத்தமல்லி நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கணுமா? இதோ டிப்ஸ்
நாம் கடையிலிருந்து வாங்கி வரும் கொத்தமல்லி சில மணி நேரத்திற்கெல்லாம் கெட்டு விடுகிறது, அழுகத் தொடங்குகிறது. இது அனைவருக்கும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது.
காய்கறி சந்தையில் இருந்து நாம் பல வித காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்து சமையல் செய்தாலும் நாம் சமைக்கும் உணவிற்கு நிறைவைத் தருவது கொத்தமல்லிதான். நம் உணவின் அழகை அதிகரிப்பதோடு சுவையையும் கூட்டுகிறது.
ஆனால், நாம் கடையிலிருந்து வாங்கி வரும் கொத்தமல்லி சில மணி நேரத்திற்கெல்லாம் கெட்டு விடுகிறது, அழுகத் தொடங்குகிறது. இது அனைவருக்கும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. கொத்தமலி கெட்டுப்போகாமல் இருக்க நாம் சில தவறுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொத்தமல்லியை கழுவி ஸ்டோர் செய்வது
நம்மில் பலர் பச்சை கொத்தமல்லியை (Coriander) கழுவி ஸ்டோர் செய்வதுண்டு. ஆனால் கொத்தமல்லி கழுவிய உடனேயே பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கழுவிய பிறகு கொத்தமல்லியை ஸ்டோர் செய்தால் அது கெட்டுவிடும். கழுவிய பிறகு, அதை உலர்த்தி பின்னர் ஸ்டோர் செய்ய முயற்சித்தாலும், அது ஒரு நாளைக்குள் கெட்டு விடும். ஆகையால், உபயோகிக்கும் முன்னர் கொத்தமல்லியை கழுவி பயன்படுத்துவது நல்லது.
தண்டுகளை வெட்டாமல் கொத்தமல்லியை ஸ்டோர் செய்தல்
எப்பொழுதும் கொத்தமல்லி தண்டுகளை வெட்டி சேமித்து வைக்க வேண்டும். ஏனென்றால் கொத்தமல்லி இலைகளின் தண்டுகளில் சில நேரங்களில் ஈரப்பதம் இருக்கும். மேலும் இது கொத்தமல்லியை கெடுத்து விடும். கொத்தமல்லியின் வேர்கள் மற்றும் தண்டுகளை வெட்டி சேமிப்பதன் மூலம் மட்டுமே அதை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க முடியும்.
ALSO READ:Coriander Powder: சுவையான கொத்தமல்லி பொடி செய்வது எப்படி
குளிர்சாதன பெட்டியில் தளர்வாக கொத்தமல்லியை சேமித்தல்
கொத்தமல்லியை தவறுதலாக கூட குளிர்சாதன பெட்டியில் திறந்து வைக்கக்கூடாது. ஏனெனில் கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்த பிறகு, அதன் இலைகள் சில மணி நேரங்களுக்குள் வாடி, கொத்தமல்லி கெட்டுவிடும். இதுமட்டுமல்லாமல், கொத்தமல்லி இலைகளை ஃப்ரிட்ஜில் திறந்து வைத்திருப்பது மற்ற உணவுப்பொருட்களில் அதன் வாசனையை பரவச் செய்யும்.
ஏர்-டைட் பெட்டியைப் பயன்படுத்த வேண்டும்
கொத்தமல்லியை சந்தையில் இருந்து கொண்டு வந்த 1 வாரத்திற்குப் பிறகும் அதை புதியதாக வைத்திருக்க விரும்பினால், ஏர்-டைட் பெட்டியைப் பயன்படுத்த வேண்டும். கொத்தமல்லியை காகிதத்தில் போர்த்தி காற்று புகாத பெட்டியில் வைக்கவும். கொத்தமல்லி இலைகளை நீண்ட நாட்களுக்கு நல்ல நிலையில் வைக்க இதுவே சிறந்த வழியாகும்.
ஸ்டோர் செய்யும் போது, ஈரப்பதத்தை கவனித்துக்கொள்ளவும்
கொத்தமல்லி இலைகளை ஸ்டோர் செய்யும் போது மக்கள் செய்யும் மற்றொரு தவறு, பெட்டியில் சேமித்து வைக்கும் போது ஈரப்பதத்தை கவனிக்காததுதான். கொத்தமல்லியை வைக்கும் பெட்டியை சுத்தமாக வைக்கவில்லை என்றால், அதில் சிறிது ஈரப்பதம் இருந்தாலும் கொத்தமல்லி கெட்டுவிடும். நீங்கள் சந்தையில் உங்கள் பயன்பாட்டிற்காக அதிக அளவிலான கொத்தமல்லியை வாங்கியிருந்தால், அது கெட்டுப்போகாமல் இருக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்.
ALSO READ: தினமும் கொத்தமல்லி இலையை ஜூஸ் செஞ்சு குடிச்சா இந்த பிரச்னையே வராது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR