தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்க: எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
Benefits of Coconut Oil: கோடைக்காலத்தில் சருமத்தில் ஒவ்வாமை மற்றும் முகப்பரு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உதவுகிறது.
கோடையில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், கோடைக்காலத்தில் சருமத்தில் ஒவ்வாமை மற்றும் முகப்பரு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உதவுகிறது. இவற்றுடன் சுருக்கங்கள், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல பிரச்சனைகளை தேங்காய் எண்ணெயின் உதவியால் தீர்க்க முடியும்.
இந்த பதிவில், கோடையில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. ஒவ்வாமை மற்றும் தொற்றுகளை தவிர்க்க
கோடை காலத்தில் வியர்வை வெளியேறுவதால், பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக தோலில் தொடர்ந்து அரிப்பு அல்லது சொறி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, நீங்கள் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயில் அல்லது யூகேலிப்பிடிஸ் ஆயிலை சேர்த்து, இந்த கலவையை தோலில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இதை தடவிய உடனேயே நிம்மதி கிடைக்கும்.
2. அத்லீட் ஃபுட் பிரச்சனையில் உதவும்
அத்லீட் ஃபுட் என்பது ஒரு வகையான பூஞ்சை தொற்று ஆகும். இதன் காரணமாக, பாதங்களில் வலி, அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது பொதுவாக இரண்டு கால்விரல்களுக்கு இடையில் அல்லது கால்விரல்களின் அடிப்பகுதியில் ஏற்படும். மேலும் இது உள்ளங்கால் முதல் குதிகால் வரை பரவுகிறது. இதை தவிர்க்க தேங்காய் எண்ணெயில் ஆர்கனோ அல்லது டீ ட்ரீ ஆயிலை கலந்து உபயோகிக்கலாம். ஒரு ஸ்பூன் எண்ணெயில் இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயிலே போதுமானதாக இருக்கும்.
மேலும் படிக்க | இளநீரில் உள்ளன எக்கச்சக்க நன்மைகள்: சம்மருக்கு ஏற்ற சூப்பரான பானம்
3. சுருக்கங்கள் பிரச்சனை
கோடை காலத்தில் சுருக்கங்கள் பிரச்சனை தொல்லை தரும். வயது அதிகரிப்பதைத் தவிர, நீர்ச்சத்து குறைபாடு, சருமத்தில் வறட்சி போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே உங்கள் அழகு கெட்டுவிடும். இதைத் தவிர்க்க, இரவில் தூங்கும் முன் முகத்தைக் கழுவி, 2-3 சொட்டு தேங்காய் எண்ணெயை சுருக்கங்கள் மீது தடவி லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களிலேயே வித்தியாசம் தெரியும்.
4. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இந்த காலத்தில் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை குறைக்க, தினமும் இரண்டு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு இதைச் செய்யத் தொடங்கினால் நல்ல பலன்களை காண முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வந்தால், ஸ்ட்ரெச் மார்க்ஸ் படிந்து அந்த இடம் கருமையாவதை தவிர்க்கலாம்.
5. தொண்டை புண் மற்றும் வீக்கம்
குளிர்ந்த நீரைக் குடிப்பதால் கோடைக்காலத்தில் தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். அவற்றைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். தொண்டையில் பிரச்சனை ஆரம்பித்தவுடன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உட்கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் தேங்காய் எண்ணெய் உண்ணும் தரம் வாய்ந்த, அதாவது ஃபுட் கிரேட் எண்ணெயாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கூந்தலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயும் உணவாக உட்கொள்ளும் தேங்காய் எண்ணெயும் வேறுபட்டவையாகும். ஃபுட் கிரேட் தேங்காய் எண்ணெயை நீங்கள் கூந்தலில் பயன்படுத்தலாம். ஆனால், கூந்தலின் தேங்காய் எண்ணெயை உட்கொள்ளக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Weight Loss Tips: இதய நோயாளிகளுக்கான ஆரோக்கியமான எடை இழப்பு உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR