இளநீரில் உள்ளன எக்கச்சக்க நன்மைகள்: சம்மருக்கு ஏற்ற சூப்பரான பானம்

Benefits of Tender Coconut: இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2022, 02:43 PM IST
  • இளநீர் வெயில் காலத்துக்கு ஏற்ற பானமாகும்.
  • இளநீர் தோல் பராமரிப்பில் உதவுகிறது.
  • இளநீர் ஆற்றலை ஊக்குவிப்பதற்கு உகந்த பானமாகும்.
இளநீரில் உள்ளன எக்கச்சக்க நன்மைகள்: சம்மருக்கு ஏற்ற சூப்பரான பானம்  title=

இளநீர் நன்மைகள்: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில் நம்மை பாடாய் படுத்துகிறது. வெயில் காலத்தில் உடலின் ஆற்றலும் குறைந்து நாம் அடிக்கடி பலவீனமாய் உணர்வது உண்டு. வெயிலால் ஏற்படும் பலவீனத்தை சரிச்செய்ய நாம் கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளையும் பானங்களையும் உண்ண வேண்டியது அவசியமாகும். 

கொளுத்தும் வெயிலில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இந்த சீசனில் உடலுக்கு நன்மை செய்யும் பல பழங்கள் மற்றும் பழச்சாறுகள் கிடைக்கும். அவற்றில் மிக முக்கியமானது தேங்காயும் அதன் தண்ணீரான இளநீரும். 

இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. தேங்காய்க்குள் இருக்கும் இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும். 

இதில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் ஆகியவை உள்ளன. தேங்காயில் 94 சதவீதம் நீர் இருக்கும். இதில் கொழுப்பு மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் தென்னை மரங்கள் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன. கோடை காலத்தில் அருமருந்தாக உதவும் இளநீரின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது 

ஆற்றலை ஊக்குவிக்க உதவும்

அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக, உடலில் உள்ள ஆற்றல் அளவு குறைகிறது. இளநீர் உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். இதனுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் இளநீர் அதிகரிக்கிறது.

இது இன்சுலினாகவும் செயல்படுகிறது

இளநீர் உடலில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இன்சுலின் பற்றாக்குறையால் நீரிழிவு பிரச்சனை ஏற்படுகிறது. இளநீர் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.

இளநீர் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்

சிறுநீரக கோளாறு போன்ற நோய்களுக்கு இளநீர் அதிக நன்மை பயக்கும். இதன் நுகர்வு கற்களின் படிகங்களைக் குறைக்கிறது. இளநீர் கற்களை கரைத்து சிறுநீரகத்திலிருந்து கற்களை சிறுநீர் மூலம் அகற்றும் பணியையும் செய்கிறது. 

தோல் பராமரிப்பில் உதவும் 

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளநீர் குடிப்பதாலும், இளநீர் கொண்டு முகத்தை கழுவுவதாலும் முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவ. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |முலாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News