உலகம் இன்னும் கொரோனாவின் பிடியில் இருந்து மீளாத நிலையில், கொரோனா தடுப்பு மருந்து தான் ஒரே தீர்வு என உலக மக்கள் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்ற வாரம், அமெரிக்காவின் பிப்சர் (Pfizer) மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech)  மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகித வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்துள்ள  Pfizer நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், இதன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். 


இந்நிலையில், இன்று, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்து வரும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், அதன் தடுப்பூசி, 94.5 சதவிகித ஆற்றல் கொண்டது எனக் கூறி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 


மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து தயாரிப்பிற்கு அமெரிக்க (America) அரசு நேரிடையாக உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Pfizer தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி...!!!


இப்போது, பைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதில் வெற்றி அடைந்தால், டிசம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவிடம், கொரோனாவிற்கு எதிரான இரண்டு தடுப்பூசி இருக்கும். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 60 மில்லியன் அளவிலான தடுப்பூசி தயாரிக்கப்படலாம்


சீனாவின் (China) வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது


இது வரை 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாதொற்று காரணமாக இதுவரை 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்தியா உட்பட ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


ALSO READ | பகீர் தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டாலும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீளவில்லை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR