பகீர் தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டாலும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீளவில்லை..!!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகள் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீள்வது அரிதாகவே காணப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2020, 01:05 PM IST
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகள் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீள்வது அரிதாகவே காணப்படுகிறது.
  • இதுவரை 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பகீர் தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டாலும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீளவில்லை..!!! title=

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும் நோயாளிகளின் நுரையீரலில் அடைப்பு காணப்படுகிறது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகள் நுரையீரல் பாதிப்பில் இருந்து மீள்வது அரிதாகவே காணப்படுகிறது. அவர்கள் நோய்த்தொற்றை தோற்கடித்து விட்டனர். ஆனால், 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகும் நுரையீரலில் அடைப்பு காணப்படுகிறது. இதுவரை, இதுபோன்ற பல நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பிறகும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். தில்லி (Delhi)  உட்பட நாட்டின் பல பெருநகர மருத்துவமனைகளில் இந்த நிலைமை காணப்படுகிறது.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் கொரோனா நோயால் (Corona Virus) பாதிக்கப்பட்ட பின்னர் ஆரோக்கியமாக இருந்தாலும், பின்னர் அவர்கள் நுரையீரல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  இவை கொரோனா நோய்த்தொற்றின் பக்க விளைவுகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகளின் ஆலோசகர் டாக்டர் அசோக் ஜெய்னர் கூறுகையில், இது உலகின் பல நாடுகளில் இது போன்ற பாதிப்புகள்  காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குணமடையும் விகிதம் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், நோய்த்தொற்றின் பிடியிலிருந்து மீண்டு 2 வாரங்களுக்குப் பிறகுதான் சிலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டாக்டர் ஜென்னர் இந்தியாவில் (India) உள்ள தனது மருத்துவர் நண்பர் ஒருவர்  கொரோனாவினால் பாதிக்கப்பட்டார் என்றும் நான்கு வாரங்களுக்குப் பிறகு, அவர் நுரையீரல் பரிசோதனையைப் பெற முடிவு செய்தபோது, ​​அவரது நுரையீரலில் 50 சதவீதத்தில் ஃபைப்ரோஸிஸ் பிரச்சினைகள் இருந்தது கண்டறியப்பட்டதாக கூறினார். பின்னர் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொற்றுநோயிலிருந்து மீண்டபின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத ஏராளமான நோயாளிகள் இன்னும் உள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News