Skin Care: தூங்கும் போது இத தடவுங்க, முகம் ரொம்ப அழகா இருக்கும்
Face Beauty Tips: அழகாக இருக்க அனைவரின் விருப்பமாக இருக்கும். எனவே, சரியான நேரத்தில் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு போகும் போதெல்லாம், இந்த பிரச்சனையை நீக்க பல விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களைப் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் செலவே இல்லாமல் குறைந்த விலையில் சிறந்த சரும பராமரிப்பு பலன்களை நீங்கள் பெற விரும்பினால், இதற்கு கிளிசரின் முயற்சி செய்யலாம். இது சருமத்தின் ஈரப்பதத்தைப் பூட்டி, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் இந்த கிளிசரினை இரவில் பயன்படுத்துவதே சிறந்த பலனை தரும்.
கிளிசரின் பயன்படுத்துவதால் என்ன நன்மை
கிளிசரின் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, அதனால்தான் இது பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதைப் பயன்படுத்துவதற்கான வழி மிகவும் எளிதானது. ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறுடன் கிளிசரின் கலந்து உங்கள் வறண்ட சருமத்தில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும், மேலும் உங்களுக்கு குதிகால் வெடிப்பு இருந்தால் கிளிசரின் அதற்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
கிளிசரின் நன்மைகள்
1. கிரிஸ்டல் கிளியர் க்ளோயிங் ஸ்கினாக இருக்கும்: உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில், இந்த கரும்புள்ளிகளை நீக்க, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டரை 3 தேக்கரண்டி கிளிசரின் கலந்து தடவிஇ இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். பின்னர் காலையில் எழுந்ததும் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி, இப்படி சில நாட்கள் செய்து வந்தால், முகத்தில் அபரிதமான பொலிவு ஏற்படும்.
2. முகத்தின் வறட்சி நீங்கும்: முகத்தில் வறட்சி ஏற்படும் போது, நீங்கள் கிளிசரின் பயன்படுத்த வேண்டும், இரவில் தூங்கும் முன், கிளிசரின் சிறிது பால் கிரீம் கலந்து முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள். இறுதியாக முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
3. முகத்தை ஈரப்பதமாக்குங்கள்: நமது B9Aருமத்திற்கு கிளிசரின் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த மாய்ஸ்சரைசிங் க்ரீம்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துங்கள்.
இரவில் தூங்கும் முன் சில குறிப்புகள்: இரவில் தூங்கும் முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும், இதற்கு ஃபேஸ் கிளீனரையும் பயன்படுத்தலாம். இது தவிர வைட்டமின் சி உள்ள பொருட்களை முகத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் சில குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன், உங்கள் முகத்தை சுமார் 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது முகத்தின் துளைகளின் அளவைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ