அக்குள் கருமையை ஒளிரச் செய்வது எப்படி: கோடை காலத்தில் வியர்வையால் பெரும்பாலானோரின் அக்குள் கருப்பாக மாறும், இதை சுத்தம் செய்வது எனபது மிகவும் கடினமான பணியாகும். அக்குள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், இதன் மூலம் நீங்கள் உங்களின் அக்குள் கருமையை போக்கி பளபளப்பாக மாற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை கொண்டு அக்குளை சுத்தம் செய்யலாம்
அக்குள்களை சுத்தம் செய்யவும், அக்குள் கருமையை குறைக்கவும் எலுமிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு எலுமிச்சையை தடிமனான துண்டுகளாக வெட்டி, அதை உங்கள் அக்குள்களில் சில நிமிடங்கள் தேய்க்கவும், பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அக்குளை கழுவவும். பின்னர் காய வைத்தப் பின் மாய்ஸ்சரைசர் கொண்டு அக்குளில் தடவவும். இது அக்குள்களின் நிறத்தை சரி செய்ய உதவும்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 


உருளைக்கிழங்கு சாறுடன் அக்குள்களை சுத்தம் செய்யலாம்
உருளைக்கிழங்கு சாறு அக்குள்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றை எடுத்து பின் அக்குளில் தடவி உலர விடவும். சில நிமிடங்களுக்குப் பிறகு அக்குள்களைக் கழுவி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் அக்குள் சுத்தமாகும்.


எலுமிச்சையுடன் மஞ்சள் கலந்து தடவவும்
அக்குள் கருமையை நீக்க, எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் அக்குள்களில் தடவி சுமார் 30 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனால் அக்குள் கருமை நீங்கும்.


பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு
எலுமிச்சை மற்றும் பப்பாளி அக்குள் கருமையை நீக்க உதவுகிறது. முதலில் பழுத்த பப்பாளியின் தோலை நீக்கவும், பின்னர் அதில் சிறுது எலுமிச்சை சாறு கலந்து அக்குள்களில் தடவவும். 20-25 நிமிடங்கள் வைத்திருந்து, உலர்த்திய பின் அக்குள்களைக் கழுவவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஊட்டச்சத்தில் தயிருடன் போட்டியிடும் சோயாபீன் தயிர்! பால் அலர்ஜி உள்ளதா? இதை சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ