Natural Deodorant: அக்குள் வியர்வை நாற்றத்தை போக்கும் ‘3’ சிறந்த இயற்கை வழிகள்..!!

சந்தையில் கிடைக்கும் டியோடரண்டுகளால் தற்காலிகத் தீர்வு மட்டுமே கிடைக்கும் என்பதோடு, அவற்றைப் பயன்படுத்துவதால் தோல் வெடிப்பு மற்றும் தோல் கருமையாக மாறும் அபாயம் ஆகிய பாதிப்புகள் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2021, 02:41 PM IST
  • சந்தையில் கிடைக்கும் டியோடரண்டுகளால் தற்காலிகத் தீர்வு மட்டுமே கிடைக்கும்.
  • தோல் வெடிப்பு மற்றும் தோல் கருமையாக மாறும் அபாயம் ஆகிய பாதிப்புகள் உள்ளது.
  • அக்குள்களின் துர்நாற்றத்தை போக்க வீட்டில் இயற்கையான வழியில் தயாரிக்கப்பட்ட டியோடரண்டுகளை பயன்படுத்துங்கள்.
Natural Deodorant: அக்குள் வியர்வை நாற்றத்தை போக்கும் ‘3’ சிறந்த இயற்கை வழிகள்..!! title=

Natural Deodorant: அதிகப்படியான வியர்வை காரணமாக, சிலரின் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வர ஆரம்பிக்கும். இது பொது இடத்தில் பழகும் போது, உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பலர் டியோடரண்டைப் பயன்படுத்துகிறார்கள். சந்தையில் கிடைக்கும் டியோடரண்டுகளால் தற்காலிகத் தீர்வு மட்டுமே கிடைக்கும் என்பதோடு, அதனால் தோல் வெடிப்பு மற்றும் தோல் கருமையாக மாறும் அபாயம் ஆகிய பாதிப்புகள் உள்ளது. அக்குள்களின் துர்நாற்றத்தை போக்க டியோடரண்டிற்கு பதிலாக வீட்டில்  இயற்கையான வழியில் தயாரிக்கப்பட்ட டியோடரண்டுகளை (Natural and Homemade Deodorants) பயன்படுத்துங்கள். அக்குள் பகுதியில் நாள் முழுவதும் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

அக்குள் துர்நாற்றத்தைப் போக்க இயற்கை டியோடரண்ட்

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அபர்ணா பத்மநாபன் வியர்வை நாற்றத்தை போக்க இயற்கை டியோடரண்ட் தயாரிப்பது எப்படி என்று கூறியுள்ளார். ஆனால், அக்குள் பகுதியில் ஷேவிங் செய்த உடனேயே இவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதிக பலனைப் பெற, அக்குள்களை சுத்தம் செய்த பிறகே இதனை தடவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ | முக சுருக்கங்களை ஓட விரட்ட ‘இந்த’ 6 விஷயங்களை செய்யக் கூடாது

துர்நாற்றத்தை போக்கும் மிக எளிதான வழி

ஒரு துளி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டருடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை கலந்து பேஸ்ட்டை தயாரிக்கவும். குளித்த பிறகு இந்த பேஸ்டை தடவவும்.  இதனால் ஏற்படும் பலன்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

எனினும், கீழே மூன்று விதமான வீட்டு தயாரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இஅய்ற்கைஅ வாசனை திரவியமாக செயல்பட்டு. உங்கள் அக்குள் வியர்வை பிரச்சனைக்கு வியக்கத்தக்க தீர்வை கொடுக்கும்.

ALSO READ | Cinnamon: பல வித வலிகளுக்கு நிவாரணமாகும் இலவங்கபட்டை..!!

முதலாவது இயற்கை டியோடரண்ட்

1/4 பங்கு மரவள்ளிக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு) மாவு, 1/4 பங்கு சமையல் சோடா, 1/3 பங்கு தேங்காய் எண்ணெய், 3-4 துளிகள் கசகசா அல்லது சந்தன நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து, தேவைக்கேற்ப குளித்த பின் அக்குள்களில் தடவவும்.

இரண்டாவது இயற்கை டியோடரண்ட்

1/4 பங்கு பேக்கிங் சோடா, 1/4 பங்கு சோள மாவு, 1/3 பங்கு பாதாம் எண்ணெய் மற்றும் 4-5 துளிகள் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். அக்குள் வாசனையை நீக்க, தேவைக்கேற்ப அல்லது வெளியே செல்லும் முன் அக்குள்களில் தடவவும்.

மூன்றாவது இயற்கை டியோடரண்ட்

1/4 பங்கு சமையல் சோடா, 1/4 பங்கு அரோரூட் மாவு, 1/3 பங்கு தேங்காய் எண்ணெய் (Coconut Oil) மற்றும் 4-5 துளிகள் வேப்ப எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து அக்குளில் தடவவும். இந்தக் கலவையை ஒரு டப்பாவில் சேமித்து, தேவைப்படும் போது, அக்குள்களின் துர்நாற்றத்தை அகற்ற, அதைப் பயன்படுத்துங்கள்.

குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Benefits of tomatoes: தக்காளியினால் ஏற்படும் ‘10’ அற்புதங்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News