புதுடெல்லி: நம் உடலுக்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்பவும் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்கிறோம்.  சில நேரங்களில் இதனால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. கொழுப்புச் சத்தைப் பற்றி நாம் மிகவும் கவலைப்படுகிறோம்.
உடல் பருமனைக் குறைக்க பல வழிகள் உள்ளன, ஆனால் பல விஷயங்கள் நம்மை குழப்பமடையச் செய்கின்றன. உணவு தொடர்பான இதுபோன்ற சில நம்பிக்கைகள் கட்டுக்கதைகளோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை..
உங்கள் சந்தேகங்களை போக்கும் இந்தப் பதிவு, என்றென்றும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் கட்டுக்கதை: உங்கள் எடை அதிகரிப்புக்கு காரணம் பரம்பரை மரபணுக்கள் தான் காரணம் என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.
உண்மை: எடை அதிகரிப்பு மற்றும் உடல் அமைப்பில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் உங்கள் பெற்றோர் அதிக எடையுடன் இருந்தால், நீங்கள் அதிக எடையுடன் இருப்பீர்கள் என்று சொல்லிக் கொண்டு எடை குறைப்பு முயற்சியை நீங்கள் கைவிட முடியாது. உடல் அளவு மற்றும் Metabolism பற்றி தெரிந்துக் கொள்ளவும். பிறகு அதற்கேற்றாற் போல, உங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் சரியான எடையைப் பராமரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும்.  


இரண்டாவது கட்டுக்கதை: எடை குறைப்புக்காக உங்கள் உணவில் சில உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.  
உண்மை: எடையை குறைப்பதற்காக சில வித உணவை தவிர்ப்பது தவறு.  உடலை உற்சாகமாகவும், சத்தானதாகவும் வைத்திருக்க உங்கள் உடலுக்கு சமநிலை உணவும், அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களும் தேவை. உடலின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புக்கு, தண்ணீர், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, தாதுக்கள் மற்றும் புரதம் என பல சத்துக்கள் தேவை. ஒரு முழுமையான உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், வேர்க்கடலை, முளைக்க வைக்கப்பட்ட உணவுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அடங்கியிருக்க வேண்டும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சரி சம்மான ஊட்டச்சத்து கொண்ட உணவை உண்டால் சரியான எடையை அடைய முடியும்.


மூன்றாவது கட்டுக்கதை: குறைந்த எடை இருந்தால் அழகாக காட்சியளிக்கலாம்.  
உண்மை: உங்களை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டுவதற்காக சில உணவுகளை தவிர்ப்பதும், ஒரு சில உணவுகளை அதிகம் எடுத்துக் கொளவதும் சரியல்ல. ஆரோக்கியமான உணவு என்பது உங்கள் வாழ்க்கை முறை, வயது, பாலினம் மற்றும் மரபணுக்கள் போன்ற சில விஷயங்களைப் பொறுத்தது. ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவை மேம்படுத்துவதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். ஆனால் மெலிதாக இருக்க வேண்டும் என்பதறகாக உங்கள் திறனை விட அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.


நான்காவது கட்டுக்கதை: ஆரோக்கியமான உனவு சுவையாக இருக்காது
உண்மை: ஆரோக்கியமான உணவும் சுவையாக இருக்கும்.  ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான உணவுகள் மற்றும் சமையல் வகைகள் தொடர்பான பல புத்தகங்கள் வந்துவிட்டன. தேவையான சத்துக்கள் கொண்ட பொருட்களை எப்படி ருசியாக சமைத்து சாப்பிடுவது என்பது உங்கள் கையில் தான் உள்ளது.  உங்கள் ஆரோக்கியம் மட்டுமல்ல, உங்கள் ருசியும் சுவையும் உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அறுசுவை உணவாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சரி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


Read Also | சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியின் நன்மைகள் கொண்ட Tea இதோ உங்களுக்காக...