சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியின் நன்மைகள் கொண்ட Tea இதோ உங்களுக்காக...

பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது. 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 16, 2020, 10:49 PM IST
சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியின் நன்மைகள் கொண்ட Tea இதோ உங்களுக்காக...

புதுடெல்லி: பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது.  இத்தகைய சூழ்நிலையில், தேநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றால், அதைவிட வேறு நிறந்த வழி ஏதும் இருக்க முடியுமா என்ன? அதிலும் மழை நாட்களில் தேநீர் குடிக்க மனம் விரும்புவது இயல்பான ஒன்று...

நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் தேநீர் தயாரிக்க மிகவும் எளிதானது மற்றும் ஒரு சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உதவியுடன் தயாரிக்கலாம். தினசரி இந்த ஒரு கப் தேநீர் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேநீர் சுவையிலும் மிகவும் நன்றாக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மசாலாப் பொருட்களின் நறுமணமும், இஞ்சி-துளசியின் சுவையும் உங்களுக்கு தேநீரின் முழு இன்பத்தையும் தரும்.

நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் தேநீர் தயாரிப்பது எப்படி?
இந்த தேநீர் செய்முறையை ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மேக்ரோபயாடிக் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா பகிர்ந்துள்ளார். இதை தயாரிக்க, இஞ்சி, துளசி, கருப்பு மிளகு, சோம்பு , சீரகம், ஓமம் மற்றும் இலவங்கப்பட்டை தூள் போன்ற சில மசாலாப் பொருட்களும் தேவைப்படும். விரும்பினால், இந்த மசாலாப் பொருட்களை அரைத்து பொடியாகவும் வைத்துக் கொள்ளலாம். இந்த கலவையின் விகிதம் என்ன தெரியுமா?
நான்கு தேக்கரண்டி ஓமம் எடுத்துக் கொண்டால், தலா ஒரு தேக்கரண்டி , சோம்பு, சீரகம், இலவங்கப்பட்டை தூள் மற்றும் 2-3 கருப்பு மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி-துளசி மற்றும் மசாலா கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் கொதித்த பிறகு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் தேநீர் தயாராகிவிட்டது.  தேநீரை சுடச்சுட குடித்து, நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக பெறுங்கள்...

Read Also | சுத்தமான பசு நெய் உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

More Stories

Trending News