Home Remedies For Constipation In Tamil: வீட்டின் கழிவறையில் அதிக நேரம் செலவழிக்கும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கலாம். கழிவறையில் அமர்ந்து மொபைல் பார்ப்பது, வார இதழ்களை வாசிப்பது, செய்தித்தாள்களை படிப்பது என கழிவறையில் 10-15 நிமிடத்திற்கும் மேலாக நேரம் செலவழிப்பவர்களையும் நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள். முக்கியமாக அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால்தான் இதேபோன்று அதிக நேரம் செலவழிக்க விரும்புவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலச்சிக்கல் பிரச்னை என்பது தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் உடல் உபாதை ஆகும்.  தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, சரியான நேரத்தில் தூங்காதது, சரியான அளவுக்கு தூங்காமல் இருப்பது உள்ளிட்ட மோசமான பழக்கவழக்கங்கள் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். மலச்சிக்கல் பிரச்னையை முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமின்றி இளம் வயதினருக்கும் மலச்சிக்கல் பிரச்னை வருகிறது. 


மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியங்கள்


மலச்சிக்கல் பிரச்னைக்கு முறையாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க, வீட்டு வைத்தியங்களையும் நீங்கள் கடைபிடிக்கலாம். அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில், மலச்சிக்கலுக்கு சிறந்த முறையில் நிவாரணம் பெற இவற்றை பின்பற்றுங்கள்.


மேலும் படிக்க | நீண்ட நாட்களுக்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்க... இந்த டிப்ஸ்கள் கை கொடுக்கும்


காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் சுடு தண்ணீரை குடியுங்கள். உங்களுக்கு தேவை என்றால், அதில் எலுமிச்சை சாரு அல்லது சிறிதளவு மஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமிண் சி உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். அதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வயிற்றுக்கும் ஆறுதல் அளிக்கும். மலச்சிக்கலுக்கும் நிவாரணம் அளிக்கும். 


நிவாரணம் அளிக்கும்


உங்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். ஓட்ஸ், முழு தானியம், பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் இருந்தால் மலம் வெளியேறுவதில் பிரச்னை இருக்காது, எளிமையாக வெளியேறும். அதே நேரத்தில், சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்யலாம். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்தால் செரிமான அமைப்பு சீராக இருக்கும். அதேநேரத்தில் ஒருநாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். நீர்ச்சத்துடன் இருப்பது குடல் இயக்கத்தை சீராக வைக்க உதவும். இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை சீராகும். 


(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.)


மேலும் படிக்க | Reverse Walking: உடல் - மூளை இரண்டும் பிட்டாக இருக்க உதவும் பின்னோக்கிய நடைபயிற்சி... இன்னைக்கே ஆரம்பிங்க
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ