Reverse Walking: உடல் - மூளை இரண்டும் பிட்டாக இருக்க உதவும் பின்னோக்கிய நடைபயிற்சி... இன்னைக்கே ஆரம்பிங்க

Reverse or Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. சாதாரண வாக்கிங்கை விட ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி வியத்தக்க பலன்களைத் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2024, 04:43 PM IST
  • ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி.
  • உங்கள் மனம் உங்கள் உடலின் இயக்கத்தில் முழுமையாக கவனம் செலுத்துகிறது.
  • ரிவர்ஸ் வாக்கிங் செய்வது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
Reverse Walking: உடல் - மூளை இரண்டும் பிட்டாக இருக்க உதவும் பின்னோக்கிய நடைபயிற்சி... இன்னைக்கே ஆரம்பிங்க title=

Reverse or Backward Walking Benefits: நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் பருமன் குறைவதோடு மட்டுமொன்றி, இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்ர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய் அபாயம் வெகுவாகக் குறைகிறது என்பதை மறுக்க இயலாது. அதே போன்று, இப்போது ட்ரண்ட் ஆகி வரும் பின்னோகிய நடைப்பயிற்சி என்னும் ரிவர்ஸ் வாக்கிங் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என வலலுநர்கள் பலர் கூறுகின்றனர். ரிவர்ஸ் வாக்கிங் செய்வது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. சாதாரண வாக்கிங்கை விட ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி வியத்தக்க பலன்களைத் தரும். ரிவர்ஸ் வாக்கிங் பயிற்சியில் உங்கள் உடலும் மனதும் சேர்ந்து வேலை செய்கிறது. நடக்கும் போது கீழே விழுந்து விடாமல் இருக்க, உங்கள் மனம் உங்கள் உடலின் இயக்கத்தில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சியில் முழு கவனம் செலுத்துகிறது.

மூளை ஆரோக்கியம் (Brain Health)

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது, மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி என்பதால், மூளையை மிகவும் அலெர்ட்டாக வேலை செய்ய உதவும். குறிப்பாக மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

தசை வலிமை ( Healthy Muscles)

பின்னோக்கிய நடைபயிற்சி தசைகளை பலப்படுத்துகிறது. கால்கள் மற்றும் இடுப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால், உடலின் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது தசைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக வேலை செய்யும். 

இதய ஆரோக்கியம் (Heart Health)

பின்னோக்கிய நடைபயிற்சி ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீரான ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

உடல் பருமன் (Obesity Control)

ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் போது வழக்கமான நடைப்பயிற்சியை அதிக கலோரிகளின் அளவைக் காட்டிலும், அதிக கலோரிகளை எரிக்க முடியும் என்பதால், உடல் பருமன், தொப்பை கொழுப்பு ஆகியவற்றை சிறப்பாக எரிக்கலாம். 

 மூட்டு வலியில் இருந்து நிவாரணம் ( Joint Pain Remedies)

பின்னோக்கிய நடைபயிற்சியை மேற்கொள்வதினால், முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தலைகீழாக நடப்பது முதுகுத்தண்டு மற்றும் முழங்கால்களில் அழுத்தத்தை குறைக்கிறது. இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

பின்னோக்கிய நடைபயிற்சி ஒட்டுமொத்த உடலை வலிமைப்படுத்துவதோடு, மூளை மிகவும் சுறுசுறுப்பாக அலர்டாக இருக்க உதவுகிறது. தினமு 15 நிமிடம் ரிவர்ஸ் வாக்கிங் செய்தாலே உடல் பருமனையும் கொழுப்பையும் மிக விரைவாக குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ரிவர்ஸ் வாக்கிங் முதலில் கடினமான பயிற்சியாக தெரிந்தாலும், தினமும் செய்யும் போது, எளிதாகிவிடும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் ஓமம்: இப்படி உட்கொண்டால் அதிக பயன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News