நம்மில் பலருக்கும் இரவு நேரங்களில் என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூகம் என்பது வரவே வராது. பகல் நேரத்தில் இருக்கும் ஒரு புத்துணர்ச்சி இரவிலும் இருக்கும். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. இரவு தூங்க செல்லும் நேரம் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்துவது முக்கிய காரணம். நாம் தொடர்ந்து அப்படி செய்யும்போது மூளை தனது வேலையை இரவில் மேலும் சுறுசுறுப்பாக நினைக்கும். மேலும் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல, இரவு உணவு உட்கொண்டு சூடாக பால் அல்லது தண்ணீர் குடித்து விட்டு சீக்கிரமாக தூங்கி பகலில் சீக்கிரமாக விழிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும். இவை அனைத்தும் நம் அன்றாட பழக்க வழக்கத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்றால் சிலர் என்ன செய்தாலும் இரவில் தூக்கம் வருவது இல்லை எனக்கூறுவார்கள். மருத்துரை அனுகி உறக்கத்திற்கான மருந்தையும் உட்கொள்வார்கள். சிலர் இந்த தூக்கம் இன்மை பிரச்சனையால் மன நோயாளியாக மாறும் நிலையும் ஏற்படும். இதற்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளமால் நம் வீட்டிலேயே மேற்கொள்ளும் சில வைத்தியங்களை பார்த்தலாம். 


மேலும் படிக்க | ரசாயனம் சேர்க்கப்படாத ஆர்கானிக் கருப்பட்டி


தூக்கமின்மை பிரச்சனையால் வரும் விளைவுகள் 


இரவில் நீண்ட நாட்கள் தூங்காமல் இருந்தால் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி இருதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி தூங்காமல் இருந்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சரி, பணிக்கு செல்லும் பெரியவர்களும் சரி தங்களின் வேலையில் முழுமையான பங்களிப்பை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. 


கசகசா பால் 


சமையலறையின் அஞ்சரை பெட்டியில் இருக்கும் ஒரு முக்கிய பொருள் கசகசா. ஆய்வுகளின் படி கசகசா கலந்த பாலை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரி செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உறக்கமின்மை பிரச்சனையையும் இவை சரிசெய்கிறது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கசகசாவை அரைமணி நேரம் ஊறவைத்து அதை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து குடித்து விட்டு உறங்க சென்றால் நிம்மதியான உறக்கம் வரும்.



மருதாணி பூ 


மருதாணி இலைகள் போன்று மருதாணி பூக்களும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்த பூக்கள் மன அழுத்தம் போக்கி நிம்மதியான உறக்கத்துக்கு வழி வகுக்கிறது. மருதாணி பூவை பறித்து தலையணைக்கு கீழே வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.



(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ