Upper Body Pain Symptoms For Heart Attack: நவீன காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றால் உடல்நலப் பாதிப்புகள் என்பதும் அதிகரித்துவிட்டது எனலாம். அதாவது, புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் என்பது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதாக கூறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னர் கூறியதை போல் இந்த உடல்நல பாதிப்புகள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்பட பல காரணிகள் இருப்பதால் நீங்கள் அடிக்கடி உடல் முழுவதற்குமான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.


இந்தியாவில் மக்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதில் அதிக தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, பொருளாதாரம் சார்ந்தும் மக்கள் இதுபோன்ற முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். இருப்பினும், அரசு பொது மருத்துவமனைகளில் இதுபோன்ற உடல் பரிசோதனைகளை இலவசமாகவே நீங்கள் மேற்கொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, கொலஸ்ட்ரால் அளவு உள்ளிட்ட பல மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே செய்யலாம், அங்கும் உங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் கிடைக்கும். 


மேலும் படிக்க | ஏறும் சுகர் லெவலை உடனே குறைக்க காலையில் இதை உண்ணுங்கள்


இது ஒருபுறம் இருக்க, உங்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் வரும்போது உடலிலும் சில வலிகள், மாற்றங்கள் ஏற்படும். அதுபோன்ற வலிகளையும், உடல் சார்ந்த மாற்றத்தையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. அந்த வகையில், நெஞ்சு வலி ஏற்படும் முன் ஒருவருக்கு உடலின் மேற்பகுதிகளின் சில இடங்களில் வலிகள் ஏற்படும். அதனை இங்கு காணலாம். 


தாடையில் வலி


தாடையில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனவே, தாடையில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். மாரடைப்பு முன்கூட்டியே தடுக்கலாம். 


கழுத்து வலி


கழுத்து வலியும் மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். உங்களுக்கு நீண்ட நாளாக கழுத்து வலி இருக்கிறது என்றால் அதனை அலட்சியப்படுத்தாமல் அதுகுறித்து மருத்துவ ஆலோசனையை பெறவும். 


தோள்பட்டை வலி


இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு இடது தோள்பட்டையில் கடுமையான வலி இருக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எவ்வித காரணமும் இன்றி உங்களின் தோள்பட்டையில்  வலி எடுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


முதுகு வலி


நீண்ட நாள்களாக உங்களுக்கு முதுகு வலி அதிகம் இருந்தால், அது மாரடைப்புக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். சரியான பொஷிஷனில் தூங்காததாலும், வேலை செய்யும்போது சரியாக அமராததும்தான் இந்த வலிக்கு முக்கிய காரணம் என நினைப்பார்கள். எனவே, முதுகு வலியை கூட அலட்சியப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனையை பெறவும். 


நெஞ்சு வலி


இதுவும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். உங்களின் இடது பக்கம் நெஞ்சு பகுதியில் வலியெடுத்தால் அது மாரடைப்பாக கூட இருக்கலாம். இருப்பினும், வாயு போன்ற சில பிரச்னைகளின் போதும் இது தென்படும் என்பதால் அலட்சிய வேண்டாம்.


மேலும் படிக்க | மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ