மோசமான தினசரி மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த தீராத நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலையில் எழுந்தவுடன் இந்த 5 பொருட்களை உட்கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த் முடியும்.
நீங்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப்படி, இன்றும் நமது மசாலா பொருட்கள் மற்றும் உலர் பழங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மற்றும் நீரிழிவு அபாயத்தை அகற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. எனவே அத்தகைய பொருட்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், பாதாம், அக்ரூட் பருப்புகள், திராட்சை மற்றும் முந்திரி போன்ற 2 முதல் 3 உலர் பழங்களை இரவில் தூங்கும் முன் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்ளுங்கள்.
பப்பாளி, செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் பப்பாளியை தவறாமல் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து உள்ளது, இது உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் முளைவிட்ட வெந்தயத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்த உதவும்.
உணவில் சுவையை சேர்க்கும் இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் எழுந்தவுடன் இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. எனவே இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.