நமது உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் முக்கியமான பொருள் ரத்தம். தற்போது ரத்தத்தை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில், ஒரு நபரின் இரத்த வகையுடன் பக்கவாதம் வருவதற்கான அபாயம் எந்தளவு தொடர்பு கொண்டுள்ளது என்பதை கண்டறிந்து இருக்கின்றனர்.  ரத்த வகையை வைத்து கண்டறியப்பட்டு இருக்கும் இந்த ஆராய்ச்சியின் மூலமாக இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவதைக் கணிக்கவும், தடுக்கவும் முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  நமது இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் பரந்த அளவிலான இரசாயனங்களை வைத்து ரத்தத்தின் வகைகள் கண்டறியப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் உணவுகள்! 


பொதுவாக இருக்கும் ரத்த வகை எதுவென்று பார்த்தோமானால் அது A மற்றும் B ஆகும்.  சில சமயங்களில் A மற்றும் B இணைந்து சிலருக்கு ஒன்றாக AB ஆகவும், சிலருக்கு தனித்தனியாக A அல்லது B ஆகவும் அல்லது O என்று ரத்த வகைகள் இருக்கிறது.  மற்ற இரத்த வகைகளுடன் ஒப்பிடும்போது, ​​A வகை இரத்தம் உள்ளவர்கள் 60 வயதிற்கு முன்னதாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. 'முன்கூட்டிய-ஆன்செட் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் அபாயத்திற்கு பொதுவான மரபணு மாறுபாடுகளின் பங்களிப்பு' என்கிற தலைப்பில் நியூராலஜி சில ஆய்வறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறது.  A1 துணைக்குழுவின் மரபணு மற்றும் ஆரம்பகால பக்கவாதம் ஆகியவை மரபணு ஆய்வின் மூலம் வெளிப்படையான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. 


இதுகுறித்த நடத்தப்பட்ட ஆய்வில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ள சுமார் 600,000 பக்கவாதம் அல்லாதவர்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட்ட சுமார் 17,000 நோயாளிகளை உட்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  கிட்டத்தட்ட 48 மரபணு ஆய்வுகளை நடத்தி ஆராய்ச்சியாளர்கள் இதிலிருந்து கிடைத்த தகவல்களை சேகரித்தனர்.  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆரம்ப அபாயத்துடன் தொடர்புடைய இரண்டு பகுதிகள் கண்டறியப்பட்டன, ஒன்று இரத்த வகை மரபணுக்களின் இருப்பிடத்துடன் பொருந்தியது.  இரத்த வகை மரபணுக்களின் இரண்டாவது ஆய்வின்படி, மற்ற இரத்த வகைகளைக் கொண்ட மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, ​​​​A வகை இரத்தம் கொண்ட குழுவின் மாறுபாட்டிற்காக மரபணுக்கள் குறியிடப்பட்ட நபர்களுக்கு 60 வயதுக்கு முன் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 16 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.


அதுவே O1 க்கான மரபணுவைக் கொண்ட நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால் A வகை இரத்தம் உள்ள அனைவருமே பக்கவாத நோயால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  இருப்பினும் A இரத்த வகை ஏன் அதிக ஆபத்தை அளிக்கிறது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.  ஆனால் இது இரத்தக் குழாய்களை வரிசைப்படுத்தும் பிளேட்லெட்டுகள் மற்றும் செல்கள், புரதங்கள் போன்ற இரத்த உறைதல் காரணிகளுடன் சேர்ந்து ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ