நமது உடலின் முக்கியமான உறுப்பாக சிறுநீரகம் இருக்கிறது, நமது உடலிற்குள் செல்லும் அசுத்தமான கழிவுகளை வடிக்கட்டி சுத்தமாக்கும் ஒரு சிறப்பான வேலையை தான் சிறுநீரகம் செய்கிறது.  சிறுநீரகம் நமது உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்தால் தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும், இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  சிறுநீரகம் சரியாக செயல்படாமல் நமது ரத்தமும் சுத்திகரிக்கப்படாமல் போய்விட்டால் நமது உடலின் மற்ற உறுப்புகள் சேதமடையக்கூடும்.  சிறுநீரக புற்றுநோய் என்பது இப்போது அதிகரித்து வரக்கூடிய பிரச்சனையாக உள்ளது, செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினால் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டு நமது உடலில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுகிறது.  ஆரம்பத்திலேயே சிறுநீரக புற்றுநோயை நாம் கவனிக்காவிட்டால் இது மற்ற உறுப்புகளுக்கும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.  புகைபிடித்தல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மரபணு போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சில காரணங்களாக கருதப்படுகிறது.  சிறுநீரக புற்றுநோயில் நான்கு வகை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர், இந்த வகைகளை பற்றி இப்போது காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? 


1) சிறுநீரக சர்கோமா:


சிறுநீரக சர்கோமா என்பது சிறுநீரக புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை, இது சிறுநீரகங்களின் இணைப்பு திசுக்களில் தொடங்குகிறது.  ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால், அருகில் உள்ள உறுப்புகளுக்கும் எலும்புகளுக்கும் பரவும்.


2) சிறுநீரக செல் புற்றுநோய்:


பெரியவர்களில் காணப்படும் மிகவும் பொதுவான சிறுநீரக புற்றுநோய் இது, சிறுநீரகத்தில் ஒற்றை கட்டியாக உருவாகிறது.  சரியான நேரத்தில் பரிசோதிக்காவிட்டால் இரு சிறுநீரகங்களையும் பாதிக்கும். 


3) வில்ம்ஸின் கட்டி:


இது பெரும்பாலும் குழந்தைகளில் காணப்படுகிறது, குறிப்பாக இது 3-4 வயது வரையுள்ள குழந்தைகளில் காணப்படும் அரிய வகை புற்றுநோயாகும்.  மரபணு மாற்றம் காரணமாக இந்த நிலை குழந்தைகளுக்கு ஏற்படலாம்,


4) இடைநிலை செல் கார்சினோமா:


சிறுநீரகத்தின் முக்கிய பகுதியுடன் சிறுநீர்க்குழாய் இணைக்கும் பகுதியில் இந்த புற்றுநோய் தொடங்குகிறது. சிறுநீர்க்குழாய் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் குழாய் ஆகும்.


சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்:


1) சிறுநீரில் இரத்தம் (ஹெமாட்டூரியா)


2) சோர்வு


3) பக்கவாட்டு வலி


3) பசியின்மை 


4) சிறுநீரக பகுதியில் ஒரு கட்டி 


5) உடல்நிலை சரியில்லை என்ற பொதுவான உணர்வு


6) இரத்த சோகை


7) எடை இழப்பு


8) எலும்பு வலி


9) உயர் இரத்த அழுத்தம்


10) குறைந்த காய்ச்சல்


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்க வெந்நீர் குடித்தால் போதுமா? உண்மை என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ