இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

போதுமான தூக்கம் இல்லாவிட்டால் டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உருவாகும்.    

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2023, 05:41 PM IST
  • தூக்கமின்மையால் இதய நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.
  • போதுமான அளவு தூங்குவதால் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
  • ஒரு நபர் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.
இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

ஏதேனும் சில வேலைகள் காரணமாக நாம் இரவில் தாமதாக உறங்க செல்லலாம், அப்படி தாமதாக தூங்கி அடுத்த நாள் நாம் எழும்போது தலைவலி அல்லது உடல்சோர்வுடன் காணப்படுவோம்.  சரியான அளவு நாம் தூங்காவிட்டால் பலவிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.  போதுமான தூக்கம் இல்லாவிட்டால் டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உருவாகும்.  மேலும் தூக்கமின்மை காரணமாக, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை பெற வேண்டியது அவசியம். போதுமான அளவு தூங்குவதால் மறுநாள் நீங்கள் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள் மற்றும் உங்கள் மனநிலை மேம்படும்.  தினசரி நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டுமானால் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.   

1) இரவில் நல்ல தூக்கத்தை பெற சில உடற்பயிற்சிகள் உதவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது.  ஒரு நபர் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

மேலும் படிக்க | ஒரு மாதம் சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்க... உங்க உடம்பு எப்படி மாறுது பாருங்க!

2) நீங்கள் அதிக எடையுடன் இருப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும், உங்கள் எடையை 10 சதவிகிதம் மட்டுமே குறைப்பது உங்கள் இரத்த சர்க்கரையின் நிர்வாகத்தை மேம்படுத்தும், அத்துடன் மனச்சோர்வு மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும். 

3) புரதம் நிறைந்த வேறு எந்த சப்ளிமெண்ட்களையும் சேர்க்காமல் இயற்கையிலேயே புரதசத்து நிறைந்த கோழி, முட்டை, கடல் உணவுகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  நாள் முழுவதும் புரதத்தை தவறாமல் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். 

4) தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், டேப்லெட்டுகள், ரேடியோக்கள் மற்றும் கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து அதிக வெளிச்சம் உங்களைத் தூங்கவிடாமல் தடுக்கலாம்.  எனவே உங்கள் மொபைலை படுக்கைக்கு அருகில் வைத்திருந்தால், அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை பயன்படுத்துங்கள். 

5) சைரன் ஒலி, நாய் குரைக்கும் சத்தம் அல்லது மிகவும் சத்தமாக இருக்கும் தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் ஒருவரின் தூக்கம் பாதிக்கும்.  இரைச்சல் இல்லாமல் அமைதியான இடத்தில் தூங்க வேண்டியது அவசியம். 

6) 75 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் அல்லது 54 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழே வெப்பநிலை உள்ள அறையில் உறங்குவது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும்.  நிபுணர்களின் கூற்றுப்படி, 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 20 டிகிரி செல்சியஸ்) வரை இருக்கும், அறை தான் தூங்குவதற்கான சரியான வெப்பநிலை என்று கூறப்படுகிறது, அதேசமயம் சற்று குளிரான சூழல் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. 

7)  நிம்மதியான உறக்கத்தை பெற ஒரு நல்ல தலையணை மற்றும் மெத்தையை எடுத்துக் கொள்ளுங்கள். உட்புற வெப்பநிலை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கக்கூடாது.  மேலும் இயற்கை மற்றும் செயற்கை ஒளி அளவை குறைந்தபட்சமாக வைத்திருங்கள். 

8) 71% சதவீதம் பேர் புதிதாக சலவை செய்யப்பட்ட துணிகளில் நன்றாக தூங்குவதாக தெரிவிக்கின்றனர், நீங்கள் இரவில் நல்ல தூக்கத்தை பெற ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் லாவெண்டர் அல்லது கெமோமில் போன்ற அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை நிரப்பி, படுக்கையில் தெளிக்கவும்.  அந்த நறுமணங்கள் உங்களுக்கு நல்ல தரமான தூக்கத்தை கொடுக்கும்.
 
9) கழுத்து மற்றும் முதுகுவலியைத் தவிர்க்க, முழங்கால்களுக்குக் கீழே கூடுதல் தலையணையையும், கீழ் முதுகின் கீழ் ஒரு சிறிய தலையணையை வைக்க பரிந்துரைக்கப்படுகிறது,  அதே சமயம் பக்கவாட்டில் தூங்குபவர்கள் தங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஒரு தட்டையான குஷனை வைக்க வேண்டும்.  இப்படி சில சௌகரியமான ஏற்பாடுகளை செய்து தூங்குவது நிம்மதியான தூக்கத்தை பெற உதவும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாமே ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News