சமைத்தால் சத்து இல்லை.. இந்த காய்கறிகளை அப்படியே சாப்பிடுங்கள்!
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Health Tips: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் அதில் சிலவற்றை நீங்கள் சமைத்தால் அவற்றின் ஊட்டச்சத்து கூறுகள் அழிந்துவிடுகிறது. இதன் காரணமாக உங்கள் உடலுக்கு அதனின் முழு பலன் கிடைக்காதது.
அதனால்தான் அவற்றை பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மையை தரும். எனவே, கீழே கொடுக்கப்பட்டவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், அவற்றை பச்சையாக சாப்பிட முயற்சிக்கவும். எந்தெந்த பொருட்களைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வெங்காயம்
வெங்காயம் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. குழம்பில் அடிப்படையாக பயன்படுத்தப்படும் காய்கறி, வெங்காயம். ஆனால் பச்சை வெங்காயத்தை சாலட் வடிவில் சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஏனெனில் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருக்கிறது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மறுபுறம், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட் இரும்புச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதனை பச்சையாக சாப்பிடும்போது அதிக நன்மை பயக்கும். அதனால் தான், இந்த காய்கறியை பச்சையாகவும் சாப்பிட வேண்டும். பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன், உங்கள் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். https://zeenews.india.com/tamil/health/beetroot-warning-if-you-have-these-problems-do-not-eat-beetroot-health-tips-431758
எச்சரிக்கை!! இந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கு கிரீன் டீ ஆபத்து!!
தக்காளி
தென்னிந்திய சமையலில் தக்காளி இன்றியமையாதது. ஆனால் நீங்கள் உண்மையில் தக்காளியின் சத்துக்களை பெற விரும்பினால், அதை சாலட் வடிவில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் தக்காளியை சமைத்த பின் அதை உண்பதால் அதன் சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் தான் பச்சையாக சாப்பிடுவது அதிக பலன் தரும் என கூறப்படுகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். அதனால்தான் அதனை உட்கொள்ள அதிக பரிந்துரைக்கப்படுகிறது. ப்ரோக்கோலியை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவது எப்போதும் நல்லது. ஆனால் நீங்கள் அதை சமைக்க விரும்பினால் கூட, உப்பு மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
காலிஃபிளவர்
ப்ரோக்கோலியைப் போலவே காலிஃபிளவரையும் வேகவைக்கத் தேவையில்லை. நன்றாக வெட்டி, தேவையில்லாதவற்றை எடுத்துவிட்டு உப்பு மட்டும் பயன்படுத்தி சாப்பிடலாம்.
(பொறூப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஓவர் எடையை ஒரேயடியா குறைக்கணுமா? டீ-க்கு பதிலா இந்த மேஜிக் பானங்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ