எச்சரிக்கை!! இந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கு கிரீன் டீ ஆபத்து!!

Green Tea Side Effects: கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. எனினும் கிரீன் டீ சிலருக்கு தீங்கு விளைவிக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2023, 07:04 PM IST
  • கிரீன் டீ உணவுகளில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும்.
  • உங்களுக்கு மைக்ரேன் பிரச்சனை இருந்தால், க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம்.
  • க்ரீன் டீயில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.
எச்சரிக்கை!! இந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கு கிரீன் டீ ஆபத்து!! title=

க்ரீன் டீ யாருக்கு ஆபத்து: இன்றைய காலகட்டத்தில் க்ரீன் டீயின் ட்ரெண்ட் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது வழக்கமான டீயில் இருந்து வேறுபட்டது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கிரீன் டீயை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கிரீன் டீ உடலுக்கு ஆற்றலைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. எனினும் கிரீன் டீ சிலருக்கு தீங்கு விளைவிக்கிறது. சிலர் கிரீன் டீ குடிக்க தடை உள்ளது. யார் கிரீன் டீ அருந்தக்கூடாது? இதனால் வரும் பாதிப்புகள் என்ன? இந்த பதிவில் விரிவாக காணலாம். 

ஏங்சைட்டி:  

அதிக பதட்டம் உள்ளவர்கள், க்ரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயில் காஃபின் இருப்பதால் பதட்டம் இன்னும் அதிகரிக்கும், இதயத் துடிப்பு வேகமாக இருக்கும், தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். ஆகையால் அதிக பதட்டம் கொள்ளும் இயல்பு உள்ளவர்கள் முற்றிலும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஓவர் எடையை ஒரேயடியா குறைக்கணுமா? டீ-க்கு பதிலா இந்த மேஜிக் பானங்களை குடிங்க

ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகள்: 

க்ரீன் டீயில் உள்ள டானின்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாந்தியை உண்டாக்கும். அல்சர் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு காலியாக இருக்கும்போது கிரீன் டீ குடிக்கக்கூடாது. 

இரத்த சோகை: 

கிரீன் டீ உணவுகளில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. அதிக அளவு கிரீன் டீயை உட்கொள்வது ஆபத்தானது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம். அது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், க்ரீன் டீயை உட்கொள்வது அதன் உறிஞ்சுதலை மேலும் குறைக்கும் என்பதாலும், பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்: 

கிரீன் டீயில் காஃபின், கேட்டசின்கள் மற்றும் டானின்கள் உள்ளன. இந்த மூன்று பொருட்களும் கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது பாலூட்டும் தாயாக இருந்தால், ​​ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் ஏற்படலாம். அதே சமயம் பாலுடன் சேர்ந்து காஃபின் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.

ஒற்றைத் தலைவலி: 

உங்களுக்கு மைக்ரேன் பிரச்சனை இருந்தால், க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம். க்ரீன் டீயில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். நாள் முழுவதும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கிரீன் டீ உட்கொண்டால், அது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Glowing Skin: சிகப்பான அழகைப் பெற மாதுளை பழம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News