கோடை காலத்தில் அடிக்கும் வெப்பதால் எந்த உணவாக இருந்தாலும் சீக்கிரமே கெட்டுவிடும். எனவே அளவாக சமைத்து பிரெஷாக சாப்பிடுவதே சிறந்தது. இதில் உணவுகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் கூட வெளியே வைத்தால் கெட்டுவிடும். இதுபோன்ற காரணங்களால்தான் கோடையில் ஃபிரிஜின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்காக எதை வேண்டுமென்றாலும் ஃபிரிஜில் வைத்துவிடலாம் என்கிற எண்ணமும் தவறு. சில பழங்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அவை உங்களுகே விஷமாக மாறும். அந்த வகையில் கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜில் அடிக்கடி இந்த பழங்களை வைக்கிறீர்கள் எனில் இன்றே தவிர்த்திடுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்பூசணி:


இது ஆச்சரியமாக இருந்தாலும், தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது. தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, ​​அதில் உள்ள சத்துக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், ஃபுட் பாய்சன் அபாயமும் அதிகரிக்கிறது. 


ஏனெனில் வெட்டப்பட்ட தர்பூசணியை ஃபிரிட்ஜில் அப்படியே வைப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. அவற்றை அப்படியே நேரடியாக உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க. எனவே ஒருபோதும் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.


மேலும் படிக்க | எலுமிச்சைத் தோலில் என்ன இருக்கு? அலட்சியம் வேண்டாம்! சுகாதார பொக்கிஷமே இருக்கு


ஆரஞ்சு


ஆரஞ்சு பழம் அமிலம் நிறைந்தது. இந்த அமிலம் குளிர்சாதனப் பெட்டியின் குளிரைத் தாங்க முடியாமல் அதன் சத்துக்களை இழக்கிறது. எனவே எந்த சிட்ரஸ் பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்க வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ந்த நீரில் போட்டு வையுங்கள்.


வேறு எந்தெந்த பழங்கள்?


ஒரு அறிக்கையின்படி, ஆப்ரிகாட், ஆசிய பேரிக்காய், வெண்ணெய், வாழைப்பழம், கொய்யா, கிவி, மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, பேரீச்சம்பழம், பீச், பேரிக்காய், பேரிச்சம் பழம், பிளம்ஸ் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது . ஏனெனில் இந்த பழங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தவுடன் அவற்றின் குணங்களை இழந்துவிடும். மாம்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து ஊட்டச்சத்து மதிப்பும் குறைகிறது.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ