எலுமிச்சைத் தோலில் என்ன இருக்கு? அலட்சியம் வேண்டாம்! சுகாதார பொக்கிஷமே இருக்கு

Lemon Peels Benefits: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்த பிறகு, அதன் தோலை தூக்கி எறிபவரா நீங்கள்? அதன் நன்மைகள் தெரிந்தால் அதை கண்டிப்பாக செய்யவே மாட்டீர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2023, 11:13 AM IST
  • எலுமிச்சம்பழத்தைப் பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறிபவரா?
  • எலுமிச்சைத் தோலில் இருக்கும் நன்மைகள்
  • ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு எலுமிச்சைத்தோல்
எலுமிச்சைத் தோலில் என்ன இருக்கு? அலட்சியம் வேண்டாம்! சுகாதார பொக்கிஷமே இருக்கு title=

Lemon Peels: எலுமிச்சையின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், இது தோல், முடி மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை சாறு புளிப்பாகத் தோன்றினாலும், அது ஒரு அருமருந்தாகும். எலுமிச்சையில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்தபிறகு, அதன் தோலை வீணாக்கிவிடுகிறோம், ஆனால் எலுமிச்சைத்தோலின் பலன்கள் தெரிந்தாலும் ஒருபோதும் அதை வீணாக்கமாட்டீர்கள்.

எலுமிச்சை தோல்களின் நன்மைகள்
 
வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சை தோல்களில் காணப்படுகின்றன, இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். எலுமிச்சம்பழத் தோல்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சாதாரண அளவுடைய எலுமிச்சம் பழத்தின் தோலில் பொட்டாசியம் 160 மில்லிகிராம் உள்ளது.

எலுமிச்சம் பழத்தின் தோலில்  வைட்டமின் சி 129 மில்லிகிராம் உள்ளது

எலுமிச்சம் பழத்தின் தோலில் 10.6 கிராம் நார்ச்சத்து உள்ளது

எலுமிச்சைத் தோலில் வைட்டமின் ஏ, தோலில் 50 IU என்ற அளவில் உள்ளது.

மேலும் படிக்க | வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

புற்றுநோய் எதிர்ப்பு

எலுமிச்சை தோலில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் சருமப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். இதன் தோலிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் டி-லைமோனீன் (D-Limonene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது, பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

எலுமிச்சை தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் 

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எலுமிச்சை தோல்களில் காணப்படுகின்றன, இது உடலுக்கு வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் நன்மை பயக்கும்.

எலுமிச்சைத் தோலில் கால்சியம், மக்னீசியத்துடன் சேர்ந்திருக்கும் பொட்டாசியம், ரத்தக்குழாய்ச் சுவர்களைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

எலுமிச்சை தோல்களை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை தோல்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

வாயிலுள்ள துர்நாற்றத்தைப் போக்கும் சிறப்பு பண்பு எலுமிச்சைத் தோலுக்கு உண்டு. அபூர்வமான கனியான எலுமிச்சை உடல் எடையை குறைப்பதற்கு பயன்படும் என்பதைப் போலவே, அதன் தோலும் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

எலுமிச்சையின் தோலை காயவைத்து பொடி செய்துக் கொண்டு, அவ்வப்போது பயன்படுத்தலாம். இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும், உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | உங்கள் நாளை நன்மையுடன் ஆரம்பியுங்கள்... புத்துணர்ச்சி தரும் இந்த 5 வகை டீ உடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News