நல்ல ஆரோக்கியத்திற்கு இரவில் சரியாக தூங்குவது முக்கியம். தினசரி இரவும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இதனால் தான், நிபுணர்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் சுமார் 6 - 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். ஆனால், நம்மில் பலருக்கு ஆழ்ந்த தூக்கம் அல்லது நிம்மதியான தூக்கம் வருவதில்லை. இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு நபர் ஆழ்ந்த நிம்மதியான தூக்க பெற, டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில உணவுகளை, இரவில் உட்கொள்ளும்போது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். இதனால் சுகாதார வல்லுநர்கள் இரவில் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஃபின்


காஃபின் கொண்ட உணவு அல்லது பானங்களை ஒருபோதும் தூங்க போகும் நேரத்தில் உட்கொள்ளக் கூடாது. அதனால் தான் இரவில் தூங்கும் போது தேநீர் மற்றும் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இது மட்டுமல்லாமல், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளிலும் காஃபின் காணப்படுகிறது. எனவே,  காஃபினேட் சாக்லேட் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இரவில் நீங்கள் காஃபின் எடுக்கவில்லை என்றால், நீங்கள் மிகச் சிறந்த தூக்கத்தைப் பெறலாம். மேலும், சாக்லேட் ஹார்மோன்களைத் தூண்டுகிறது. இரவில் சாக்லேட் சாப்பிடுவது இரவு முழுவதும் தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


அமில உணவுகள்


இரவில் அமில உணவை சாப்பிடுவதும் தூக்கத்தை பாதிக்கும். அதனால் தான் இரவில் தூங்கும்போது நீங்கள் ஒருபோதும் அமில உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இரவில் தூங்கும்போது புளிப்பு பழச்சாறு, பச்சை வெங்காயம், தக்காளி சாஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல், இரவில் பீஸ்ஸா சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். பீட்ஸா, பாஸ்தா, மோமோஸ், நூடுல்ஸ் போன்ற பொருட்களை இரவில் உட்கொள்ளக்கூடாது. இவை இரவில் ஜீரணிப்பது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றினால், இரவில் நன்றாக தூங்கலாம்.


மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!


செரிக்க கடினமான  உணவுகள்


இரவில் லைட்டாக சாப்பிடுவது எப்போதும் நல்லது. இரவில் நீங்கள் ஒருபோதும் செரிக்க கடினமான உணவுகளை சாப்பிடக்கூடாது. செரிக்க கடினமான உணவுகள் உங்கள் செரிமான அமைப்பை பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இதனால் வயிறு நிரம்பியிருக்கலாம். ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். மேலும், வயிற்று வலி மற்றும் பிடிப்பு பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால்தான் இரவில் பர்கர் போன்ற வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.


திரவ உணவுகள்


இரவில் திரவ உணவை உட்கொள்வதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில், இரவில் தூங்கும்போது நீங்கள் திரவ பொருட்களை உட்கொண்டால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியிருக்கும். அதனால்தான் இரவில் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி போன்ற உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இரவில் நீங்கள் அதிக குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


ஆல்கஹால்


படுக்கை நேரத்தில் மது அருந்துவதும் தூக்கத்தை பாதிக்கும். அதனால்தான் நீங்கள் ஒருபோதும் இரவில் மது அருந்தக்கூடாது. ஆல்கஹால் உங்கள் செரிமானத்தை பாதிக்கும். இது நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியிருக்கும். ஆல்கஹால் தூக்க சுழற்சியை சீர்குலைக்கிறது. மது அருந்திய பிறகு குறட்டை ஏற்படலாம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் சிக்கல் இருக்கலாம்.


இரவில் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை, தூங்க முயற்சித்தாலும் பயனில்லை என்பதற்கு  காரணம் உட்கொள்ளும் உணவுதான். ஆம், இரவில் நாம் உண்ணும் உணவு நிச்சயம் நம் தூக்கத்தை பாதிக்கிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு இரவில் சரியாக தூங்குவது முக்கியம். தினசரி இரவும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கிறது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ