காபி பக்கவிளைவுகள்: இந்தியாவில் காபி பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை, அது வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி, கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி, அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும். நம் உடலுக்கு மிகவும் பயனுள்ள இந்த அற்புதமான பானத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் சிலர் அளவுக்கு அதிகமாக காபி குடிக்க விரும்புகிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றார்கள் நிபுணர்கள். பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், நாம் ஏன் அதிகமாக காபி சாப்பிடக்கூடாது என்று கூறினார்.
1. மறதி நோய் ( Dementia)
ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம். இது ஒரு மனநோயாகும், இதில் நோயாளி சாதாரணமாக மனரீதியாக ஆரோக்கியமாக நடந்து கொள்ள முடியாது. மேலும், இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும்.
2. தூக்கமின்மை (Insomia)
புத்துணர்ச்சி கிடைப்பதாலும், தூக்கம் மற்றும் சோர்வு மறைவதாலும் காபி குடிக்கிறோம். இதன் காரணமாக, விழிப்புணர்வு அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் அதிகமாக காபி குடித்தால், காஃபின் காரணமாக, சரியான நேரத்தில் தூக்கம் வராது, மேலும் தூங்கும் நேரம் முற்றிலும் மாறி உடல் பிரச்சனைகளையும் தூக்கமின்மை பிரச்சனையையும் ஏற்படுத்தி விடும்.
3. செரிமான பிரச்சனை (Indigestion)
காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளின் ஒன்று நம் வயிற்றில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள். ஏனெனில் அதிகபடியான காபி அருந்துவதன் காரணமாக காஸ்ட்ரின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது பெருங்குடலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதிகமாக காபி குடித்தால் அஜீரண பிரச்சனை வரலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! மூளையின் சக்தியை உறிஞ்சும் ‘5’ கெட்ட பழக்கங்கள்!
4. உயர் இரத்த அழுத்தம் (High BP)
காபியில் அதிக அளவு காஃபின் காணப்படுகிறது. இதன் காரணமாக இது இரத்த அழுத்தத்தை மிகவும் அதிகரிக்கிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு இதய நோய் இருந்தால் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், காபியை மிகக் குறைந்த அளவில் குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் ‘விட்டமின் B12’ நிறைந்த சில உணவுகள்!
மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ