Dinner Tips: இரவு உணவில் இவை மட்டும் வேண்டவே வேண்டாம்... கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும்
Dinner Tips: செரிமான செயல்முறை இரவில் குறைகிறது. ஆகையால், இரவு உணவுக்கு உடல் எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
Dinner Tips: உடலின் சீரான செயல்பாட்டிற்கு நாம் நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலை, மதியம், இரவு என நாம் உண்ணும் உணவுக்கு இதில் அதிக முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக இரவு உணவில் நாம் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
செரிமான செயல்முறை இரவில் குறைகிறது. ஆகையால், இரவு உணவுக்கு உடல் எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இல்லையெனில், வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். இதன் காரணமாக, பல நேரங்களில் இரவில் தூங்க முடியாமல் போகும். மேலும் மறுநாள் காலையிலும் சோர்வான உணர்வு இருக்கும். ஆகையால், இரவு உணவில், ஹெவியான மற்றும் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும் உணவுகளை தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இரவு உணவு தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகளை பற்றி இங்கே காணலாம்
காஃபின் (Caffeine)
காபி, டீ அல்லது எனர்ஜி பானங்கள் போன்ற காஃபின் கலந்த பானங்களை இரவில் உட்கொள்ளக் கூடாது. காஃபின் மூளையை செயல்படுத்தி தூக்கத்தை சீர்குலைக்கிறது. இது தவிர, காஃபின் உட்கொள்வது உடலில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது இரவு நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகள் (Starch Foods)
அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் பாஸ்தா போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை ஜீரணிப்பது இரவில் மிக கடினமாக இருக்கும். இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் இரவில் செரிமான செயல்முறை மெதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வயிறு கனத்து ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | கடைகளில் போலியான பிரட் வாங்கி ஏமாற வேண்டாம்! இந்த முறையில் சரி பார்க்கவும்!
வறுத்த உணவுகள் (Fried Foods)
சமோசா, சிப்ஸ், பக்கோடா, பர்கர் போன்ற வறுத்த உணவுகளில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருக்கின்றன. இது மட்டுமின்றி, இவை ஜீரணிக்க கடினமாகவும் இருக்கும். இரவில் இதை உட்கொள்வதால் வயிற்றில் அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் சீர்குலைந்து, அடுத்த நாள் காலையில் சேர்வும் தூக்கமின்மையும் நம்மை படுத்தக்கூடும்.
சிட்ரஸ் பழங்கள் (Citrus Fruits)
ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அமிலத்தன்மை அதிக அளவில் உள்ளது. இது இரவில் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட பழங்களை இரவில் உட்கொள்வதால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் இரவில் தூங்க முடியாமல் போகும். ஆகையல, இரவில் இப்படிப்பட்ட பழங்களை தவிர்ப்பது நல்லது.
சீஸ் (Cheese)
வெண்ணெய், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட அல்லது அதிக கொழுப்புள்ள சீஸ் வகைகளை இரவு உணவின் போது தவிர்க்க வேண்டும். இவை விரைவாக ஜீரணமாகாது. மேலும், இவை தலைவலி மற்றும் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ