Weight Loss Tips: உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான தந்திரம்
Weight Loss Tips: உடல் எடை அதிகரிக்கிறது என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது? அதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
உடல் பருமன் என்பது பல ஆண்டுகளாக ஒருவர் தொடரும் வாழ்க்கை முறை பழக்கங்களின் எதிரொலியாகும். உடல் பருமனின் சில அறிகுறிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் குண்டாக இருப்பதையும், அளவுக்கு மேல் அதிகமான எடையில் இருப்பதையும் ஏற்றுக் கொள்ளாமல், நான் பூசினாப்பில இருக்கேன், இதுதான் அழகு என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். இந்த மெத்தனப் போக்கே, உடல் எடையை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிற்து. உடல் பருமன், எடை குறைப்பு என்பது ஒன்றும் பிரம்ம வித்தை அல்ல, தெரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு ராக்கெட் டெக்னிக்கும் இல்லை.
வாழ்க்கையை நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ உடல் எடையை பராமரிப்பது அவசியம் ஆகும்.
உடல் பருமனின் விளைவுகள் என்ன?
உடல் பருமன், அதிக எடை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு கடுமையான சுகாதார நிலை அல்லது வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும், இது உடலில் படியும் அதிகப்படியான கொழுப்பின் விளைவாகும், இது உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
ஏனெனில் இது நாள்பட்ட பல சுகாதார நிலைமைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்து காரணியாக மாறலாம். இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதையும், ஏடை அதிகமாக இருப்பதன் அறிகுறிகள் என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும்
உடல் பருமனுக்கு என்ன காரணம்?
உடல் பருமனுக்கு பல காரணிகள் உள்ளன, மேலும் இது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் விளைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எளிமையான வார்த்தைகளில் சொல்வது என்றால், ஒரு நபர் உடற்பயிற்சி மற்றும் சாதாரண தினசரி செயல்பாடுகளுக்கு தேவையானதை விட, அதிக கலோரிகளை உட்கொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமனின் பொதுவான அறிகுறிகள்
உடல் பருமனுக்கு சில பொதுவான அறிகுறிகள் உண்டு. அதிகப்படியான வியர்வை, முதுகு அல்லது மூட்டு வலி, வெப்பத்த்தை சகித்துக் கொள்ள்ள முடியாத தன்மை, சோர்வு, அதிக இதய துடிப்பு, மூச்சு வாங்குதல், படபடப்பு மனச்சோர்வு உட்பட பல அறிகுறிகள் மூலம் உடல் பருமனை தெரிந்துக் கொள்ளலாம். உடல் பருமனை உறுதி செய்யும் சில ஆரம்ப அறிகுறிகளும் உள்ளன.
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க
உடல் பருமனின் ஆரம்ப அறிகுறிகள்
நீங்கள் மெதுவாக உடல் பருமனின் பிடியில் சிக்குகிறீர்கள் என்று சொல்லக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள் இவை. கடுமையான தாகம், சோர்வு, உறங்கும்போது மூச்சுத்திணறல், சரியாக தூங்க முடியாமை, சுவாச பிரச்சனைகள் மற்றும் அதிகப்படியான பசி ஆகியவை உடல் பருமன் அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
உடல் பருமனை எவ்வாறு நிர்வகிப்பது
உடல் பருமன் என்பது பல ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்ட பழக்கங்களின் எதிரொலியாகும். என்ன சாப்பிடுகிறோம் என்பதும், மது அருந்துவது, புகைபிடிப்பது, நொறுக்குத் தீனிகள் உண்பது என பல விஷயங்கள், உடல் பருமனை அதிகரிக்கின்றன. உங்கள் உணவு புதிதாக சமைக்கப்பட்டதாகவும், ஆரோக்கியமானகவும் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும். அளவான உணவு, போதுமான அளவு உடற்பயிற்சி என்ற மந்திரமே உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான தந்திரம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! இதை தவிர்த்தால் ஒல்லியாகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ